vrijdag 29 april 2011

இதுகும் ஒரு உண்மைக் கதையாம்… வாசியுங்கள்…

இதுகும் ஒரு உண்மைக் கதையாம்… வாசியுங்கள்…
By athirady • April 26, 2011
இதுகும் ஒரு உண்மைக் கதையாம்… வாசியுங்கள்… வாசித்து வீட்டீர்களா பகுதி 2
By athirady • April 27, 2011
இதுகும் ஒரு உண்மைக் கதையாம்… வாசியுங்கள்… வாசித்து வீட்டீர்களா பகுதி 3By athirady • April 27, 2011
இதுகும் ஒரு உண்மைக் கதையாம்… வாசியுங்கள்… வாசித்து வீட்டீர்களா பகுதி 4
By athirady • April 27, 2011
இதுகும் ஒரு உண்மைக் கதையாம்… வாசியுங்கள்… வாசித்து வீட்டீர்களா…??? பகுதி 5 
By athirady • April 27, 2011


By athirady • April 26, 2011

அன்பார்ந்த எங்கள் தமிழீழ மக்களே !!
நான் உங்களிடம் சில துரோகிகளால் மறைக்கப்பட்டுவரும் சில முக்கியமான விடயங்களை பற்றி சொல்லுவதற்காக இந்த இரத்தம் தோய்ந்த வரலாற்றின் சிதறிய மனதை உங்களுக்கு தருகின்றேன் இதனை நான் உங்களுக்கு சொல்லுவதால் எனக்கு எந்தவித தனிப்பட்ட இலாபங்களும் இல்லை.நீங்கள் இன்னும் ஏமாளிகளாக இருக்கக்கூடாது என்ற நோக்கத்திற்காகவே உங்களுக்கு சகோதரன் கவிஞர் இராஜேந்திரகுமார் மூலமாக உங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன் .இராஜேந்திரகுமார் கருத்தாடு களம் தொடர்ந்து பார்த்துவருகின்றேன்.நிச்சயம் எந்த ஒளிவு மறைவின்றி நான் அனுப்பியதை உங்கள் முன் பிரசுரிப்பார் என்ற நன்பிக்கையில் அனுப்பி வைக்கின்றேன்.
அதற்கு முன் நான் யார் என்பதை பதுகாப்புகாரனமாக சுருக்கமாக சொல்லுகிறேன்!!!
நான் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் அதிமுக்கிய விசேட படைப்பிரிவில் முக்கிய பொறுப்பாளராக கடைசிக்கட்ட யுத்தம் வரை போராடி அண்ணனின் உத்தரவுக்கமைய மக்களோடு மக்களாக வந்து இன்று பாதுகாப்புக்காக[ ? ] ஒரு நாட்டில் வாழ்ந்து வருகின்றேன் .
தற்போது நமது அடுத்தகட்ட நகர்வுகளை செய்வோர் நமது மக்களை ஏமாற்றுபவர்களாக இருப்பதனாலும் அடுத்த கட்ட நகர்வுகளுக்கு நல்ல ஒரு புலம்பெயர் தேச தலைமையை உருவாக்கவும், எமது போராட்டம் இப்படி வருவதற்கு காரணம் என்ன என்று தற்போதைய நமது தலைமையாளர்கள் என்று கூறும் சிலர் உங்களிடம் மறைக்கும் சில உண்மைகளை நான் உங்களுக்கு சொல்லி மக்களாகிய உங்களை விழிப்படைய செய்வதற்காகவும் தான் இந்த தகவல்களை நான் உங்கள் முன் வைக்கிறேன்.
இதில் நான் யாரையும் குறைகூற வரவில்லை. ஆனால் யாரால் நமது போராட்டம் இப்படி ஒரு உறை நிலைக்கு வந்தது என்ற செய்தியை வெளிப்படுத்த வேண்டிய நிலைப்பாடு தற்போது உள்ளதாலும் நமது இந்த தலைவர்களை நம்பி அண்ணன் கட்டளைகுட்பட்டு சரணடைந்த போராளிகள் மற்றும் இன்னும் தப்பி வெளிநாடுகளில் படும் கஷ்ட நிலைகளை இவர்கள் கண்டு கொள்ளாது தமது சுயநலன்களுக்காக செயற்படுவதையும் வெளிக்கொணரும் முகமாகவும் தான் இதை சொல்லுகிறேன் .
இதை நான் சொல்லுவதனால் நீங்கள் நினைக்கலாம் இவருக்கு எப்படி இந்த தகவல்கள் தெரியும் என்று.ஆம் நான் 1990 ஆண்டு முதல் போராளியாக் தலைமையுடன் பல முக்கிய பொறுப்புகளில் இருந்ததன் காரணமாகவும் கடைசி நேரத்தில் தொடர்பாடல் பரிவர்த்தனைகளிலும் ஈடுபட்டவன் என்ற அடிப்படையில் இத்தகவல்களை எதுவித மறைவும் இன்றி சொல்லுகிறேன் .
வணக்கம்.
போராளி
கிளிநொச்சி வீழ்ச்சியின் பின் புலிகள் ஒட்டுமொத்தமாக ஒரு கடற்கரைக்கு சென்று அங்கு மூன்று தசாப்தமாக நடந்த போராட்டம் உறைநிலை கண்டதற்கு பலர் பல கதைகள் சொல்லுகின்றனர். ஆனால் இது ஏன் நடந்தது? எதற்காக நடந்தது? என்பது இப்பொழுது புலிகளின் தலைமை தாங்கள் எனக் கூறூபவர்களுக்கு நன்கு தெரியும், அவர்களுடன் இந்திய மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் நன்கு தெரியும். ஏன் நாம் தோற்றோம் ? எதனால் நாம் தோற்றோம்? யார் நம்மை தோற்க செய்தது? யார் நம்மை அந்த கடற்கரைக்கு போகச்சொன்னது இவை எல்லாம் கூட அவர்களுக்கு நன்கு தெரியும். ஆனால் இப்ப நல்லவர்கள் போல் நடிக்கின்றார்கள் . அந்த மர்மமான விடையங்கள் பலவற்றை நமது புலம்பெயர் தேச மக்களின் விழிப்புணர்வுக்காக சொல்லலாம் என நினைக்கின்றேன்.உங்கள் சம்மதத்தோடு.
ஆம். அந்த நம்பவைக்கப்பட்டு கழுத்தறுக்கப்பட்ட நாட்களிலிருந்து!!!
முள்ளிவாய்க்கால் சாட்சியமற்ற களமாக மாற்றப்படுகின்றது என்பது உலகிற்கு மட்டுமல்ல நம் புலம் பெயர் தேச இப்போதைய தலைமை எனக்கூறும் பலருக்கும் நன்கு தெரிந்தே நடந்தது. விடுதலைப்புலிகள் எதற்காக இராணுவ ரீதியில் பலவீனமான ஒரு கடற்கரைக்குள் மக்களையும் போராளிகளையும் கொண்டு சென்றார்கள் என்பது பற்றி யாருக்கும் எதுவும் தெரியாது எனவும் கூறிவரும் இந்த தலைமைகள் சிலர் புலம்பெயர் தேச மக்களை இப்போது முட்டாள்கள் ஆக்குகின்றனர். முள்ளிவாய்க்கால் மற்றும் புதுக்குடியிருப்பை தக்க வைத்தபடி இருந்த போராளிகளுக்கு காடு சார்ந்த பல பிரதேசங்களை தக்க வைத்துக் கொள்ள தெரியாதா என்ன? கடற்கரை பக்கம் சென்றால் என்னவாகும் என அறியாதவர்களா நம் தலைமை? காட்டின் முக்கியத்துவம் அறியாதவர்களாகவா புலிகள் தலைமை இருந்தது?
ஆம் கிளிநொச்சியை படையினர் கைப்பற்றிய பின் நாம் மிகப்பெரும் பின்னடைவை சந்தித்தது மட்டுமல்லாது போராளிகளுக்கும் தலைமை பீடத்துக்கும் இடையில் பெரிய விரிசலையும் அது ஏற்படுத்திவிட்டது என்று சொன்னால் தப்பில்லை. புலனாய்வு தகவல்களை துல்லியமாக சேகரித்து அத்துணை விபரமாக தலைமைக்கு எடுத்து கூறியும் அவர்கள் புலனாய்வு போராளிகளின் தகவல்களை நம்பாது புலம் பெயர் தேசக்குழி பறிப்பவர்களின் செய்திகளை நம்பியது இதற்கு முக்கிய காரணம்.
அது ஒருபுறம் இருக்க, பெருமளவு ஆயுதங்களும் தளபாடங்களும், போராளிகளும் கையில் இருந்தும்,ஏன் புலிகள் பின்வாங்குதலை செய்து கொண்டிருந்தனர் என்பது கூட நீங்கள் விளங்காதிருப்பது தான் வேதனை!!! ஒரு காடு சார்ந்த பிரதேசத்தை கூட தக்க வைத்துக் கொண்டு போராடாது தம்மையும் தலைமையையும் பாதுகாக்க முடியாதவரகளாகவா அவர்கள் இருந்தனர்? இல்லை அந்த நிலைக்கு நம்மை இந்த கழுத்தறுத்தவர்கள் இட்டுச்சென்றனர் என்பதே உண்மை. இதனால் நம் போராட்ம் உறை நிலைக்கு சென்றுவிட்டது
நான் யார்மீதும் குற்றம் சொல்ல முயலவில்லை. ஆனால் கொஞ்சமாவது நம் மக்கள் அந்த நாட்களில் என்ன நடந்தது என்னதான் என்பதை தெரிந்துகொள்ளட்டுமே
பல கேள்விகளுக்கு விடை தெரிந்தும் தெரியாததாக்க முயலுகின்றனரே
மக்களை பாதுகாக்க என்று, பூநகரியில் இருந்து சிறீலங்கா இராணுவம் பரந்தன் நோக்கி புறப்பட்டதும் உடனடியாக படையணிகளை பின்வாங்கிக் கொண்ட புலிகள். அதுவும் வட போர்முனையில் அந்த நாள் வரைக்கும் படையினரை நகரவிடாது தடுத்த உறுதியோடு பலமான படையணிகளை நகர்த்திய புலிகள் ஏன் அந்தப் படையணிகளைக் கொண்டு இன்னும் இன்னும் இராணுவ நகர்வுகளை தடுக்கவோ தாமதப்படுத்தி இருக்கவோ இல்லை தமக்கான சாத்தியமான பிரதேசத்துக்குள் ஏன் நுழைய முயலவில்லை.? இங்குதான் மர்மம் இருக்கிறது!! இங்குதான் அந்த குழிபறிக்கும் நாடகம் நடைபெற்று முடிந்தது.[தொடரும்]
ஆம் எமது தலைமை பீடமும் அவர்களது சொல்லை நம்பி தற்காப்பு சமர் மட்டும் செய்து கொண்டு பின் நகரசொல்லியது. பல கேள்விகளுக்கு விடை தெரியவில்லையாயினும் சில கேள்விகளுக்கு வெளிப்படையாகவே விடை தெரிந்தும் மறைக்கப்படுகின்றன.ஆனால், தென்பகுதியிலிருந்து கிளிநொச்சி நகர் நோக்கியும், முல்லைத்தீவை நோக்கியும் ராணுவம் நெருங்கி வந்த பொழுதும் வடக்கே முகமாலை முன்னரங்கில் ராணுவம் அடைபட்டுத்தான் இருந்தது. இது பரந்தன் சந்தி வீழும் சமயத்தில் நாமாகவே விலகிக்கொண்டபடியால் ராணுவம் உள்நுழைந்தது என கூறப்பட்டது.இது நம்மை இந்தியாவினதும் மேற்குலகின் நோர்வே உள்ளிட்ட சில நாடுகளினதும் கைப்பொம்மைகளாக செயற்படத்தொடங்கிய அந்த எம் புலப்பெயர் தலைவர்கள் மக்களுக்கு சொல்லி தப்பித்துக்கொள்ளும் செய்தி. ஆனால் அதுவே எமக்கு விழுந்த நிமிர முடியாத பெரிய அடி. வடக்கில் குவிந்திருந்த 35,000 க்கு மேற்பட்ட படைகளும் தென்பகுதியிலிருந்து முன்னேறிவந்த 40,000 இற்குமதியான படைகளுடன் இணைந்துகொள்ள விட்டதுதான் நம் தலைவிதியையே மாற்றி அமைத்தது என்றால் தப்பில்லை. இது ஏன் ஏற்பட்டது?? எதனால் கைவிடப்பட்டு செல்லப்பட்டது??
ஆம்!அது நாள் வரையும் ஒரு அடிகூட நகரமுடியாதுமுடக்கி வைத்திருந்த நமக்கு நமது நிலைகளை கைவிட்டு முல்லைத்தீவு நோக்கி செல்லும்படி தலைமைபீடத்திலிருந்து உத்தரவு கிடைத்தது. அதுவும் விரைவாக பின்னகரும்படி உத்தரவு கிடைத்தது. இதனால் தீபன் அண்ணா அத்தனை காலமாக கட்டி காத்துவந்த அந்த நிலப்பரப்பு கைவிடப்பட்டது. நாம் பின்னகர்ந்து உடையார் காட்டுப்பகுதியில் எமது தற்காலிக கட்டளை மையத்தை நிறுவி செயற்பட தொடங்கியபின்தான் நமக்கு தெரிந்தது நாம் எதனால் பின் நோக்கி செல்ல பணிக்கப்பட்டோம் என்று.
யுத்தம் இறுகியவண்ணம் இருக்கும் போது நாம் இனி யுத்தத்தில் வெல்லுவது சாதகமற்றது என தெரிந்து கொண்ட தலைமை நமது மக்களையும் ,போராளிகளையும் இருப்பிடங்களை தக்கவைப்பதற்காக எமது தலைமைப்பீடம் மேற்குலக நாடுகலில் செயற்படும் எமது பொறுப்பாளர்கள் மற்றும் இந்தியாவுடனும் எமது உள்ளூர் சில அரசியற் கட்சிதலைமையுடனும் தொடர்பு கொண்டு பாதுகாப்பது பற்றியும் அடுத்த நகர்வு பற்றியும் பேசப்பட்டது .
இதற்கு அவர்கள் பலர் கூறிய கருத்து போரை இனியும் தொடரவேண்டாம் ஒரு முடிவுக்கு கொண்டுவரும்படியும் சொல்லப்பட்டதாம். இதனால் அவர்களது சொல்லை சில தளபதிகள் ஏற்றுக்கொள்ளவில்லை இதனால் எமது போராளிகளுக்குள் முரண்பாடு ஏற்படத்தொடங்கியது. முரண்பாடு ஏற்படக்காரணம் கிளிநொச்சி விழ்ந்தபின் போரை தொடர்ந்து செல்வதில் அர்த்தமில்லை என எமது புலனாய்வு தகவல்கள் எடுத்து கூறியும் புலம்பெயர் நாட்டு பொறுப்பாளர்களின் கண்துடைப்பு பேச்சுக்களை நம்பி இறுதிவரை போராட பணிக்கப்பப்பட்டது . இது அநேக போராளிகளின் மனதை மாற்றிவிட்டது. இதுவும் நம் போராட்டம் விழ்ச்சியடைய ஒரு காரணம்.இது எம் அத்தனை போராட்ட கனவுகளையும் புதைத்துவிட்டது.
மேற்குலக நாடுகளில் நமது செயற்பாடுகளை கையாண்டுவந்த கே.பி மற்றும் நெடியவன், காஸ்ரோ போன்ற பொறுப்பாளர்கள் நமக்காக நமது போராட்டத்தை காக்கும்படி புலம்பெயர் தேசத்தை கேட்டவண்ணம் இருந்ததாகவும் அவர்கள் விரைவில் ஒரு நல்லதீர்வு ஏற்படுத்தி தருவார்கள் எனவும் முதலில் கே.பி இடமிருந்து நமக்கு தகவல் வந்தது. மேலும் இந்த நடவடிக்கைக்கு சாதகமாக புலிகளை தாக்குதல்களை குறைத்துக்கொள்ளும் படியும் சொல்லப்பட்டது.
நம்மை இந்த காலகட்டத்தில் மேற்குலகில் இருந்த எமது அந்த பொறுப்பாளர்கள் வழிநடத்த தொடங்கிவிட்டனர்.இது தான் நாம் அத்தனையையும் இழந்து மண்டியிட வைத்த விடையம். [தொடரும்........]
அந்த பொறுப்பாளர்கள் யாரை நம்பி எம்மை பின்னகரச்சொன்னார்கள்?
எதற்காக இப்படி செய்தார்கள்?
நமது தலைமைக்கு எப்படி குழிபறிப்பு நடந்தது?
இலங்கையின் கொலை வெறிக்கு இந்தியமத்திய அரசும் கருணாநிதியும் தமிழ் நாட்டு அரசியல் வாதிகளும், மற்றும் பாதிரியார் கஸ்பார் , இந்திய மத்திய அமைச்சர்கள் சிலரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் , நமது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சொன்னவை என்ன?
செய்தவை என்ன?
மேற்குலகின் நம் பொருப்பாளர்களாக இருந்த கே.பி, காஸ்ரோ, நெடியவன், போன்றோரும் மற்றைய நம் புலம் பெயர் தேச நடவடிக்கை பொறுப்பாளர்களும் செய்தது என்ன?
என்ன சொல்லி நம் தலைமையையும் போராட்டத்தயும் குழிபறித்து விழ்த்தினர்?
நோர்வேயும் ஐரோப்பிய ஒன்றியமும் செய்தது என்ன ?
சொன்னது என்ன? பாராது விட்டது ஏன்?? எப்படி எல்லாம் நமது நகர்வுகளை முடக்கி தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்து கொன்று குவித்தனர் நம் பொறுப்பாளர்களை?
நமக்குள் இருந்து கொண்டே நமது தகவல்களை யார் யார் அரசுக்கு கொடுத்தனர்??
அவர்கள் உள்ளூர் அரசியல் வாதிகளுடன் பேசுவதாக சொல்லி எப்படி அரச கைப்பொம்மைகளாகி நமது கட்டளைப்பீடத்தி சிதைத்தனர்? எம் வான்படை கண்ட தோல்விதான் ஏன்?
தென்பகுதிகளில் எந்தவிதமான தாக்குதல்களையும் செய்யவிடாது தடுத்தது யார்?
என்ன சொல்லி தடுத்தனர்? சரணடைய சொன்னது யார்? நமது தலைமை அதற்கு எப்படி இணங்கியது?
அந்த இறுதி நாட்களில் தலைமையை காப்பாற்ற புலிகள் செய்த நடவடிக்கைகள் என்ன?
அதற்கு கே.பி, நெடியவன், காஸ்ரோ செய்தது என்ன?புலம்பெயர் செய்தியாளர்கள் செய்தது என்ன?
அதுபற்றி சொல்லுகிறேன். கேளுங்கள் .
[ஆனால் நான் இதில் யாரையும் குற்றம் சொல்லவரவில்லை நடந்த சம்பவத்தை மட்டும் சொல்லுகிறேன் மக்களே நீங்கள் அறிந்து கொள்ளுங்கள் அந்த நாட்களில் நடந்த சிலவற்றை.[தொடரும்]
2006 இல் மூதூர் வரையும்,அதன் பின்னர் யாழ்ப்பாணம் மண்கும்பான் வரையும் சென்று திடீர் என திரும்பி வந்தனர் எமது போராளிகள். அப்போது ஏன் இத்தனை இழப்புகளோடு திரும்பி வந்தனர்.என்ற கேள்வி பலர் மனதிலும் எழுந்ததுதான்.
ஆம்! இத்தனை வலிமையுடன் இருந்த நமது போராளிகள் இப்படி முடக்கப்பட்டதன் காரணம்?
ஒவ்வொரு தடவையும் நாம் பல இடங்களை கைப்பற்றிய பொழுதெல்லாம் இலங்கை அரசு இந்தியாவுடனும் சில மேற்கு நாடுகளுடனும் சேர்ந்து எமது படைகளை பின்வாங்க செய்தனர்.
இதற்கு இலங்கை அரசு இந்தியாவின் துணையுடன் எம் தலைமையை பணிய வைத்து அந்த நிகழ்வுகளை கச்சிதமாக முடித்து வந்தது. நம் தலைமை அந்த நிர்ப்பந்தத்துக்கு பணிந்ததன் காரணம் மேற்குலகுடன் இணைந்து நம் போராட்டம் பயங்கரவாத போராக திரிபுபடுத்தி அழிக்கப்படும் என இந்தியா கூறிவந்ததுதான்.அதனால் இந்தியாவின் சொல்லை தட்ட முடியாத நிலை.
அதேபோலத்தான் நமது கட்டுப்பாட்டுக்குள்ளும் சில இடங்களை சிங்களம் பிடித்திருந்த பொழுது இந்தியா, நோர்வே போன்ற சில ஐரோப்பிய நாடுகளின் உதவியுடனேயே நமது தரப்பும் செய்தது.
இதன் காரணமாக இராணுவ சமநிலையை இருபகுதியினரும் தக்கவைத்து வந்தனர் .
[குறிப்பு:- ஒட்டுமொத்த நகர்வுகளும் அல்ல. இராணுவ தழர்ச்சி நடைபெற்று வந்த காலத்தில் அதாவது புலிகள் கை ஓங்கி சென்ற காலத்தில் தான் இப்படி நடந்தது].
இப்படி சமநிலையை தக்கவைத்து கொள்வதற்கு எமது மேற்குலக பொறுப்பாளர்கள் அன்ரன் பாலசிங்கம் மற்றும் தமிழ்ச்செல்வன் ஆகியோர் தமது அரசியல் வலிமைகளை நன்கு பயன்படுத்தி வந்தனர். இந்த நடைமுறையை நம்பித்தான் எமது இறுதி கால நகர்வும் நடந்தது.
மேற்குலகம் அப்போதைய தலைவர்கள் கே.பி,நெடியவன், காஸ்ரோ ஆகியோர் நமது அப்போதைய நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். இவர்கள் சொல்லும் விடையங்களை நம்பி நாம் கழுத்தறுக்கப்பட்டோம் என்பது தான் உண்மை.
ஆம்
யுத்தம் நம்மை முற்றுகையிட்டுக்கொண்டிருந்தபொழுது முன்னைய போல் இம்முறையும் நடக்கும்,படையினர் பின்வாங்கப்படுவர் என எதிர்பார்த்தோம் நடக்கவில்லை.. இந்தியாவின் பல தலைவர்களையும் நோர்வேயிடமும் கேட்டுப்பர்த்தோம் பதிலேதும் கிடைக்கவில்லை. இதனால் நம் புலம்பெயர் தலைவர்களை குடைந்தெடுத்தார்கள் நம் தலைமைகள் .
ஆனால் அவர்கள்
அந்த நாடுகள் கைவிரித்துவிட்டனர் எனவும்.இம்முறை போரை முடிவுக்கு கொண்டுவர இந்தியா விரும்புவதாகவும் அதற்கான நடவடிக்கைகளை [புலிகள் தலைமைப்பீடத்தை] செய்யச்சொல்லியும் கூறப்பட்டது. இந்த செய்தியால் நம் தலைமை ஆடிப்போனது ஏன் இப்படி நடந்தது? எதனால் இப்படி சொல்லப்பட்டது ? என்ற கேள்விகளுடன்.உங்கள் இராஜதந்திர நகர்வுகளை நம்பித்தானே நாம் எமது படைகளை பின்வாங்கி சென்றோம் என கூறி புலம்பெயர் தலைமைகளுடன் சீறிப்பாய்ந்தனர் நமது தலைவர்கள் .
எனவே இந்த கட்டத்தில் நம் ஒட்டு மொத்தமாக நம்பியவர்கள் எல்லோரும் சூழ்ச்சி செய்து கவிழ்த்து விட்டனர் நம் தலைமை பீடத்தை .
இருந்தும் மறுபடியும் பேசச்சொல்லி வற்புறுத்தப்பட்டது. நாம் அப்பொழுது இருந்த நிலைமையில் நாம் ஒடுக்கப்பட்டு இருந்ததால் இலங்கை அரசு அதற்கு சம்மதிக்க மறுத்துவிட்டது, உலகுக்கு மக்களை மீட்கும் போர் செய்வதாக சொல்லி எம் இதயம்வரை நகரத்தொடங்கியது.
சடுதியாக மாற்று வழி செய்யச்சொல்லி எமது தலைமை புலம்பெயர் தேசத்தை பணித்தது. இப்பொழுது தான் இந்தியாவின் நகர்வு நேரடியாக நம்மை கால்வாரிவிட்டது
இந்தியாவின் கருணாநிதி அந்த நேரத்தில் தேர்தலை மையமாக கொண்டு நகர்வுகளை செய்தார். அவரது மத்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அரசின் செயல் நெறிக்குள் இருந்து செயற்பட தொடங்கியது. இதை நாம் உடனடியாக அறிந்து கொள்ளும் நிலையில் அன்று இருந்திருக்கவில்லை. காரணம் நம் புலனாய்வு தகவல்கள் வெளி நாடுகளில் இருந்து உண்மையானதாக நம்மை வந்து சேரவில்லை.
அன்ரன் பாலசிங்கத்தின் மறைவுடன் தழர்ந்த நம் வெளிநாட்டு நகர்வுகள் அண்ணன் தமிழ்ச்செல்வனுடைய இழப்பின் பின் அடியுடன் தொலைந்துவிட்டது என்பது உண்மை. இதனால் தான் நம் புலம்பெயர் நாடுகளின் ஆதரவை ஒருதுளிகூட பெறமுடியாது போனது.
மாற்று வழி செய்வதற்கு நம் புலம்பெயர் தலைமையுடன் இந்தியாவின் கருணாநிதியின் அரசையும் அவரது நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பாதிரியார் ஜெகத்காஷ்பாரையும் தொடர்பு கொண்டவண்ணம் இருந்தது நம் தலைமை. அப்பொழுது தான் நம்பியார் கனிமொழி பாதிரியார் என எல்லோரும் மாற்று வழி செய்ய சில கட்டுப்பாடுகளை விதித்தனர்,
இந்த நிலையில் நம் போராளிகளையும் மக்களையும் காப்பற்ற வேண்டும் என நம் தலைமை எமது நிலைப்பாட்டை முன்வைத்தது.[தொடரும்...]
2006 இல் மூதூர் வரையும்,அதன் பின்னர் யாழ்ப்பாணம் மண்கும்பான் வரையும் சென்று திடீர் என திரும்பி வந்தனர் எமது போராளிகள். அப்போது ஏன் இத்தனை இழப்புகளோடு திரும்பி வந்தனர்.என்ற கேள்வி பலர் மனதிலும் எழுந்ததுதான்.
ஆம்! இத்தனை வலிமையுடன் இருந்த நமது போராளிகள் இப்படி முடக்கப்பட்டதன் காரணம்?
ஒவ்வொரு தடவையும் நாம் பல இடங்களை கைப்பற்றிய பொழுதெல்லாம் இலங்கை அரசு இந்தியாவுடனும் சில மேற்கு நாடுகளுடனும் சேர்ந்து எமது படைகளை பின்வாங்க செய்தனர்.
இதற்கு இலங்கை அரசு இந்தியாவின் துணையுடன் எம் தலைமையை பணிய வைத்து அந்த நிகழ்வுகளை கச்சிதமாக முடித்து வந்தது. நம் தலைமை அந்த நிர்ப்பந்தத்துக்கு பணிந்ததன் காரணம் மேற்குலகுடன் இணைந்து நம் போராட்டம் பயங்கரவாத போராக திரிபுபடுத்தி அழிக்கப்படும் என இந்தியா கூறிவந்ததுதான்.அதனால் இந்தியாவின் சொல்லை தட்ட முடியாத நிலை.
அதேபோலத்தான் நமது கட்டுப்பாட்டுக்குள்ளும் சில இடங்களை சிங்களம் பிடித்திருந்த பொழுது இந்தியா, நோர்வே போன்ற சில ஐரோப்பிய நாடுகளின் உதவியுடனேயே நமது தரப்பும் செய்தது.
இதன் காரணமாக இராணுவ சமநிலையை இருபகுதியினரும் தக்கவைத்து வந்தனர் .
[குறிப்பு:- ஒட்டுமொத்த நகர்வுகளும் அல்ல. இராணுவ தழர்ச்சி நடைபெற்று வந்த காலத்தில் அதாவது புலிகள் கை ஓங்கி சென்ற காலத்தில் தான் இப்படி நடந்தது].
இப்படி சமநிலையை தக்கவைத்து கொள்வதற்கு எமது மேற்குலக பொறுப்பாளர்கள் அன்ரன் பாலசிங்கம் மற்றும் தமிழ்ச்செல்வன் ஆகியோர் தமது அரசியல் வலிமைகளை நன்கு பயன்படுத்தி வந்தனர். இந்த நடைமுறையை நம்பித்தான் எமது இறுதி கால நகர்வும் நடந்தது.
மேற்குலகம் அப்போதைய தலைவர்கள் கே.பி,நெடியவன், காஸ்ரோ ஆகியோர் நமது அப்போதைய நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். இவர்கள் சொல்லும் விடையங்களை நம்பி நாம் கழுத்தறுக்கப்பட்டோம் என்பது தான் உண்மை.
ஆம்
யுத்தம் நம்மை முற்றுகையிட்டுக்கொண்டிருந்தபொழுது முன்னைய போல் இம்முறையும் நடக்கும்,படையினர் பின்வாங்கப்படுவர் என எதிர்பார்த்தோம் நடக்கவில்லை.. இந்தியாவின் பல தலைவர்களையும் நோர்வேயிடமும் கேட்டுப்பர்த்தோம் பதிலேதும் கிடைக்கவில்லை. இதனால் நம் புலம்பெயர் தலைவர்களை குடைந்தெடுத்தார்கள் நம் தலைமைகள் .
ஆனால் அவர்கள்
அந்த நாடுகள் கைவிரித்துவிட்டனர் எனவும்.இம்முறை போரை முடிவுக்கு கொண்டுவர இந்தியா விரும்புவதாகவும் அதற்கான நடவடிக்கைகளை [புலிகள் தலைமைப்பீடத்தை] செய்யச்சொல்லியும் கூறப்பட்டது. இந்த செய்தியால் நம் தலைமை ஆடிப்போனது ஏன் இப்படி நடந்தது? எதனால் இப்படி சொல்லப்பட்டது ? என்ற கேள்விகளுடன்.உங்கள் இராஜதந்திர நகர்வுகளை நம்பித்தானே நாம் எமது படைகளை பின்வாங்கி சென்றோம் என கூறி புலம்பெயர் தலைமைகளுடன் சீறிப்பாய்ந்தனர் நமது தலைவர்கள் .
எனவே இந்த கட்டத்தில் நம் ஒட்டு மொத்தமாக நம்பியவர்கள் எல்லோரும் சூழ்ச்சி செய்து கவிழ்த்து விட்டனர் நம் தலைமை பீடத்தை .
இருந்தும் மறுபடியும் பேசச்சொல்லி வற்புறுத்தப்பட்டது. நாம் அப்பொழுது இருந்த நிலைமையில் நாம் ஒடுக்கப்பட்டு இருந்ததால் இலங்கை அரசு அதற்கு சம்மதிக்க மறுத்துவிட்டது, உலகுக்கு மக்களை மீட்கும் போர் செய்வதாக சொல்லி எம் இதயம்வரை நகரத்தொடங்கியது.
சடுதியாக மாற்று வழி செய்யச்சொல்லி எமது தலைமை புலம்பெயர் தேசத்தை பணித்தது. இப்பொழுது தான் இந்தியாவின் நகர்வு நேரடியாக நம்மை கால்வாரிவிட்டது
இந்தியாவின் கருணாநிதி அந்த நேரத்தில் தேர்தலை மையமாக கொண்டு நகர்வுகளை செய்தார். அவரது மத்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அரசின் செயல் நெறிக்குள் இருந்து செயற்பட தொடங்கியது. இதை நாம் உடனடியாக அறிந்து கொள்ளும் நிலையில் அன்று இருந்திருக்கவில்லை. காரணம் நம் புலனாய்வு தகவல்கள் வெளி நாடுகளில் இருந்து உண்மையானதாக நம்மை வந்து சேரவில்லை.
அன்ரன் பாலசிங்கத்தின் மறைவுடன் தழர்ந்த நம் வெளிநாட்டு நகர்வுகள் அண்ணன் தமிழ்ச்செல்வனுடைய இழப்பின் பின் அடியுடன் தொலைந்துவிட்டது என்பது உண்மை. இதனால் தான் நம் புலம்பெயர் நாடுகளின் ஆதரவை ஒருதுளிகூட பெறமுடியாது போனது.
மாற்று வழி செய்வதற்கு நம் புலம்பெயர் தலைமையுடன் இந்தியாவின் கருணாநிதியின் அரசையும் அவரது நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பாதிரியார் ஜெகத்காஷ்பாரையும் தொடர்பு கொண்டவண்ணம் இருந்தது நம் தலைமை. அப்பொழுது தான் நம்பியார் கனிமொழி பாதிரியார் என எல்லோரும் மாற்று வழி செய்ய சில கட்டுப்பாடுகளை விதித்தனர்,
இந்த நிலையில் நம் போராளிகளையும் மக்களையும் காப்பற்ற வேண்டும் என நம் தலைமை எமது நிலைப்பாட்டை முன்வைத்தது
அந்த நிலையில் நமது கட்டளைகளை புறந்தள்ளிவிட்டு மேற்குலகினதும் இந்தியாவினதும் திட்டத்தின் படி நாம் முல்லைத்தீவை நோக்கி செல்லவேண்டும் என பணிக்கப்பட்டது இந்த செயற்பாட்டை செய்தால் தான் போராளிகளையும் மக்களையும் காப்பாற்ற தாம் முன்வருவார்கள் என இந்தியாவும் மேற்கு நாடுகளும் கூறிவிட்டதாக கே .பி கூறினார். அந்த பாதிரியார் ஊடாகவும் நமது தலைமைக்கு அப்படித்தான் செய்தி வந்தது.
என்ன செய்ய நாம் குழிபறிக்கபபட்டு விட்டோம் இனி என்ன செய்தும் பலனில்லை என மக்களையும் அழைத்துக்கொண்டு முல்லைத்தீவு நோக்கி நகரத்தொடங்கினோம். இந்த காப்பாற்றப்படுவோம் என்ற சொல்லின் அர்த்தத்தை நம்பி.
கழுத்தறுப்பு.
இவர்களின் சொல்லின் படி நாம் எமது நகர்வுகளை பின்னகர்த்தியவண்ணம் முல்லைத்தீவை நோக்கி சென்றோம் ஆனால் சிங்களப்படையினரின் தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணமே இருந்தது. இந்த காலகட்டத்தில் இந்தியா மற்றும் மேற்குலகின் வழிகாட்டலில் அவர்கள் நமக்கு சொன்ன யுத்த தணிப்பை நாம் செய்துவந்தோம் இலங்கை அரசு சொன்னதாக சொல்லப்படும் சிறிதுகால யுத்த தணிப்பு எல்லாம் பொய்யாக போனது,
நம்மை பணிய வைக்க இந்த நாடுகள் செய்த நாடகம் தான் இது என இப்போது தான் நம் தலைமைக்கு புரியத்தொடங்கியது. எத்தனை சாதனைகளை கண்ட நம் தலைமை அந்த நேரத்தில் வெளிநாட்டு நம் தலைவர்களை நம்பியதால் மோசம் போய்விட்டது.யுத்தம் முடிவுக்கு வரவுள்ளதை ஏறத்தாழ அனைவரும் அறிந்த பொழுது எமது புலம்பெயர் தேச தலைமைகள் தமக்குள்ளே முரண் படத்தொடங்கிவிட்டனர்.
கே.பி ஒருவழியும் நெடியவன், காஸ்ரோ வேறு வழிவும் நின்றனர். கே.பி நம் தலைமையையும் போராட்டத்தையும் காப்பாற்ற பலவழிகளை மேற்கொண்டு வந்தது அனைவருக்கும் தெரிந்ததே, ஆனால் இந்த இடத்தில் நாம் ஒன்றை பார்க்க வேண்டும் சிலகாலம் கே.பி கும் எமது தலைமைக்கும் இடையில் சில கருத்து மோதல் நிலவியதால் அவர் ஒதுக்கப்பட்டு பின் இறுதி நேரத்தில் அந்த பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.இருந்தும் நிதி சம்பந்தமான நடவடிக்கைகளை காஸ்ரோவும் நெடியவனும் செய்து வந்தனர். இதனால் கே.பி க்கும் தலைமை மிது கோபம் இருந்தது உண்மை தான்.
இந்த பிளவுகள் மேலும் நம்மை அழிவு நிலைக்கு கொண்டு சென்றுவிட்டது.
இந்த நிலைமையை நன்கு பயன்படுத்திய இந்தியா மேற்குலகின் தலையீட்டை தடுத்து நிறுத்தியது. நமக்கு அது நாள் வரை தெரியாது குழிபறித்து வந்த குழி பறிக்க காத்திருந்த அந்த தலைவர்கள் இந்தியாவின் வழி நடத்தளுக்கு கட்டுப்பட்டு நமக்கு ஒன்றை சொல்வதும் இந்தியாவுக்கு ஒன்றை சொல்லுவதுமாக இருந்து செயலாற்ற தொடங்கியது.
இப்போது நாம் நம் தொடர்பாளர்கள் மூலம் இந்தியாவின் சொல்படி உடையார்கட்டையும் தாண்டி புதுக்குடியிருப்பை நெருங்கியவண்ணம் இருந்தோம். ஆனால் சிங்களத்தின் அந்த முன்னகர்வுகளை தடுத்து எமது படையணிகள் எதிர்ச்சமர் செய்தவண்ணம் இருந்தது ஒருபுறம். இப்படியே காட்டு பகுதியை நோக்கி செல்லாது முள்ளிவாய்க்கால் நந்திக்கடல் பக்கம் செல்ல பணிக்கப்பட்டோம் .அப்படி சொன்னதற்கு காரணம் அங்கு வைத்து பாதுகாக்கப்பட ஏற்பாடுகள் அனைத்தும் இந்த தொடர்பாட்டாளர்கள் செய்து முடித்து விட்டதாகவும் அங்கிருந்து பொறுப்பாளர்கள் கடல் வழியாக வேறு நாடுகளுக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் மக்கள் விடுவிக்கப்படுவார்கள் எனவும் கே.பி. பாதிரியார், கனிமொழி, நோர்வே போன்ற செயற்பாட்டாளர்கள் மூலம் செய்தி கிடைத்தது.
இதற்காக புலிகளிடமிருந்து இனி இலங்கையின் எந்த பாகத்திலும் புலிகளால் எந்தவிதமான குண்டுத்தாக்குதல்களும் செய்யக்கூடாது என்று உறுதியும் கேட்கப்பட்ட பின் தான் இப்படி ஒரு ஒழுங்கு செய்யப்பட்டது.
இனி வேறு வழி இல்லை நாழுக்கு நாள் சிங்களத்தின் கொடிய தாக்குதல்கள் எம்மை அழித்தவண்ணம் இருந்தது ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில் மடிந்த வண்ணம் இருந்தனர் மக்களும் போராளிகளும். காயப்பட்டவர்கள் மருத்துவ வசதி இன்றி மரணமடையும் அவல நிலை. இதனால் மக்கள் புலிகள் மீது கோபப்படதொடங்கிவிட்டனர்.எப்படியும் நம் போராட்டததையும், மக்களையும் ,போராளிகளையும் காப்பாற்ற மாற்று வழிகளை தேடிக்கொண்டிருந்த நேரத்தில் இவர்கள் சொன்ன அந்த செய்தியை நடைமுறைப்படுத்த புலிகள் தலைமைப்பீடம் இணங்கியது.[தொடரும்...]
அவர் நாம் வன்னியிலிருந்து அடிக்கடி தொந்தரவு செய்வதாக தமது சில முக்கியத்தவர்களுக்கு கூறியதுடன் ஏதோ தாங்கள் தான் தமிழரின் தலைவர்கள் என்றும் தம்மால் எல்லாம் செய்து முடிக்க முடியும் என்றும் சொன்னவர்கள் இப்ப ஏன் என்னிடம் மண்டியிடுகின்றனர்?? இப்ப மட்டும் நான் தேவையாமோ? இவங்கள் அழிந்தால் தான் இனி நாம் எமது நடவடிக்கைகளை மேற்கொள்வது சுலபம் ஆகவே என்னால் மத்திய அரசுடன் மோத முடியாது,
இவங்கள் இன்னும் 10 அல்லது .15 நாட்களில் முடிந்துவிடுவாங்கள்
அவர்கள் தலைவிதியை யாராலும் தடுக்க முடியாது. நான் இப்ப இருக்கும் நிலையில் புலிகளுக்கு கைகொடுத்தால் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டு வைத்துக்கொள்வது கடினம் . எனவே முடியும் இவர்களை பற்றி கதைப்பதை இனி கைவிடுங்கள் என சொல்லப்பட்டதாம்
ஆனால் நாம் முயற்சி செய்வதாக அறிக்கை விடுங்கள் என்றும் சொல்லி எம் தொடர்பாளர்களை கைவிரித்துவிட்டார். இதை நாம் அப்போது வன்னியில் தொடர்பிலிருந்த பொழுது எமது கட்டுப்பாட்டறைக்கு கருணாநிதியின் அருகிலிருக்கும் புலிகளுக்கு விசுவாசமான ஒருவர் சொன்னார்.
[அவர் பெயர் விபரம் பாதுகாப்பு நிமித்தம் சொல்ல முடியாது. மன்னிக்கவும்.]
இருந்தும் கருணாநிதி வெளிப்படையாக செய்துவந்த மத்திய அரசுடனான பேச்சுவார்த்தையை தமிழக மக்கள் வழமைபோல் நம்பினர், முத்துக்குமார் போன்றோர் மரணத்தை தமது கையில் எடுத்து ஈழத்தை காப்பாற்றும்படி போராட்டங்களை நடத்தினர். ஆனால் கருணாநிதி அந்த நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தவும் பொலிசாருக்கு உத்தரவு போட்டிருந்ததாகவும் அந்த நபர் சொன்னார். இதனால் என்ன செய்தும் தமிழ் நாட்டு மக்களால் கருணாநிதியின் பிடியிலிருந்து மீழமுடியவில்லை.
என்னைப்பொறுத்தளவில் தமிழ் நாட்டு மக்களுக்கும் நம் அழிவில் பங்குண்டு என்றுதான் சொல்லுவேன்.காரணம் அந்த கடைசி நாட்களில் நடந்த தேர்தலில் தமிழர் சாவதைக்கூட போருட்படுத்தாதிருந்த கருணாநிதியை மறுபடியும் தேர்தலில் வெற்றி பெற வைத்தவர்கள் தானே இந்த தமிழர்கள் .
ராஜீவ் காந்தியின் கொலையை மையப்படுத்தி நம்மை அழிக்க திட்டம் போட்டுக்கொண்டிருந்த சோனியாவுக்கு இது நல்ல காலமாக அமைந்தது. நம் கலைஞரே கைவிரிக்குமளவுக்கு செயலற்றவராககிய பெருமை சோனியாவையே சாரும். கருணாநிதிக்கும் தான்தான்தமிழர் ஏகதலைவன் என்ற ஆசையும் எம் அழிவுக்கு காரணமாகிவிட்டது.[தொடரும்...]
ஆம் நாம் மரணத்தின் வாசலில் நின்று எம்மை காக்க கரம் நீட்டும்படி தமிழ் நாட்டு அரசை வேண்டிய பொழுது நாம் என்றும் நம்பிய தொப்பிள்கொடி உறவு செய்த வேலை இப்படி இருந்தது.
ஆம் எமது பொறுப்பாளர்களான நடேசன், பாலகுமார்,யோகி, இழந்திரையன் என பலர் தொடர்புகொண்டு முடியாமல் போக கடைசியில் சூசையும் தொடர்புகொண்டு பார்த்தார். தொடர்பை கடைசிவரை ஏற்கவில்லை கருணாநிதி. காரணம் அவர் அந்த நேரத்தில் புலிகளுக்கு ஆதரவு செய்தால் மத்திய அரசிலிருந்து வெளியேற்றப்படும் என சோனியா அம்மையார் கூறியிருந்தாராம். இதை அவரது கூட இதுக்கும் ‘தீனா மானா’ என எமது தலைமையால் அழைக்கப்படும் நபர் எமது தொடர்பகத்துக்கு அப்போது சொல்லியிருந்தார்.
என்ன செய்ய மக்களை விட கருணாநிதிக்கு சோனியாவின் உதவி தேவைப்பட்டது தனது குடும்ப பதவிகளையும் தக்க வைத்துக்கொள்ள.
இந்த நிலைமை தொடர்ந்ததால் எமது தலைமைப்பிடம் புலம்பெயர் நாடுகளின் தலைவர்களுடன் பேசிப்பார்க்கும்படி எமது வெளிநாட்டு தொடர்பாடல்களுக்கு பொறுப்பாக இருந்த கே.பி, நெடியவன், காஸ்ரோ, உருத்திரகுமார் போன்றவர்களுக்கு எம் தலைவர் உத்தரவு செய்தார்.
ஆம் இங்குதான் நம் கூட இருந்து குழிபறிக்கும் கூட்டமும் எப்ப குழிபறிககலாம் சொத்துக்களை சுருட்டலாம் எனவும் காலம் காத்திருந்த அந்த கூட்டம் தம் கைவரிசையை காட்டியது. இதில் கே.பி பொறிக்குள் விழுந்து செய்வதறியாது தடுமாரியதுதான் மிச்சம்.
எமக்குள் இருந்துகொண்டே முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்கு காரணமானவர்கள் யார் என்று பார்த்தால்.
என்னை பொறுத்தளவில் நான் நெடியவனையும் காஸ்ரோவையும்தான் சொல்லுவேன் கேபியும் ஒரு காரணம் தான்.கேபி துரோகம் செய்ய தான் முன்னர் செய்த ஆயுத விநியோகத்தைச் செய்ய முடியாமல் 2002க்குப் பின் முடக்கப்பட்டிருந்தமை அவருக்கு எம் தலைமைப்பீடத்துடன் இருந்து வந்த கசப்பு காரணமாக இருக்க முடியும்.
கேபி வழமைபோல் ஆயுத வழங்கலை, விநியோகத்தை செய்யக் கூடியதாக அப்போது இருந்திருக்குமானால் எமது படையணிகள் இவ்வளது தூரம் பின்வாங்க வேண்டியோ அல்லது தோல்வி கண்டிருக்க வேண்டிய நிலைமையோ ஏற்பட்டடிருக்காது என்பது ஒருபுறம் உண்மைதான்.
இவ் விடயத்தில் கேபி ஆற்றலும் அனுபவமும் எம்மை அந்த நேரத்தில் வந்து அடைய இவருடன் கூட இருந்த நெடியவனும் காஸ்ரோவும் இடம் கொடுக்கவில்லை தங்கள் சுய நலங்களுக்காக.
கேபியை முடக்குவதற்குக் காரணமாக இருந்தது இந்த இருவரும் எம் தலைமை பீடத்துக்கு பொய்கள் பலவற்றை கூறி அந்த இடத்தை தங்கள் வசப்படுத்திக்கொண்டன அந்த இடத்தை அவர்களுக்கு கொடுத்ததும் எங்கள் தலைமை விட்ட தவறு என்றுதான் சொல்லமுடியும்.
பல தசாப்தங்களாக கேபி செய்த ஆயுத விநியோகத்தையும் வெளிநாட்டு தொடர்புகளையும் தாமும் செய்வோம் எனப் புறப்பட்டு, எந்தவிதமான அனுபவமும் அற்ற இவர்கள் முயற்சியில் தோல்வியும் கண்டு கோடிக்கணக்கான பணத்தையும் அநியாயமாய் பறிகொடுத்து கடைசியில் ஒட்டு மொத்த இனமும் நம் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அந்த போராட்டமும் அழிந்ததும் தான் மிச்சம்.[தொடரும்]
சமாதான காலத்தில் நாம் பல கோடிக்கணக்கான பெறுமதியான ஆயுதங்களை கொள்வனவு செய்து வன்னிக்கு கொண்டுவரும் போதெல்லாம் அவை எப்படியோ சிறிலங்கா படைகளுக்கு முன்கூட்டியே தெரியவந்து அனைத்து கப்பல்களும் தாக்கி அழிக்கப்பட்டன. இதில் இரண்டு கப்பல்கள் மட்டும் தான் நமது கட்டுப்பாட்டுபகுதிக்கு அதுவும் அதிகளவு உயிர்களை கொடுத்து கொண்டு சென்றோம்.
அதுமட்டுமல்ல,இவர்கள் அப்பதவியைப் பெருவதட்கு செய்த சாதனைகளையும் சொல்கின்றேன் இவற்றை நாம் சாதாரணமாக செய்யவில்லை.அப்போதைய இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இதுந்து நமது கப்பலை சர்வதேச கடலிலிருந்து இலங்கைக்கு கொண்டு செல்லும் அனுமதியைப்பெற்றுத்தான் கொண்டுசென்றோம்.இந்த நடைமுறை எமது தலைமை பீடத்துக்கும் ரணில் விக்கிரமசிங்காவுக்கும் எமது வெளிநாட்டு தொடர்பாளர்கள் சிலருக்கும் மட்டும்தான் தெரிந்தவிடையம். இருந்தும் எமது கப்பல்களை இலங்கை படைகள் தாக்கி அழித்தன.எப்படி என்பதை தேடியபோதுதான் ஆச்சரியமான விடையம் வெளிவந்தது. நமக்கு கொண்டுவர அனுமதி தந்துவிட்டு அந்த இரகசியத்தை இந்தியாவுக்கு சொல்லியவர்தான் இந்த ரணில் விக்கிரமசிங்க. நாம் கப்பலை கொண்டுவந்து இலங்கை கடலுக்குள் பிரவேசிக்க இந்தியாவிலிருந்து செய்தி வருமாம் இலங்கை கடற்படைக்கு புலிகள் கப்பல் வருகிறதென்று,அவர்கள் பறந்துவந்து தாக்கி அழிப்பார்களாம். எப்படி இந்த ரணில் செய்த சமாதான வேஷம்.காட்டிக்கொடுப்பு. இந்தக் காரணத்தினால்தான் அப்பொழுது நடைபெற்ற அந்த ஜனாதிபதி தேர்தலை நமது தலைமை புறக்கணிக்கும்படி உத்தரவிட்டது.அதனால் ரணில் தோல்வியும் கண்டார், மகிந்தவை நாம் தெரிந்தோ தெரியாமலோ ஆட்சிப்பிடம் ஏறவைத்தோம். இது இவ்வாறாக நடந்து கொண்டு இருக்கும் பொழுது இங்கே நெடியவனும் கஸ்ரோவும் , கே.பி தான் காட்டிக்கொடுப்புகள் செய்துகொண்டு ஆயுதக்கடத்தல்களை தடுத்து நிருந்துகின்றார் என்ற விசத்தை எமது தலைமை பீடத்துக்கு தூவத்தொடங்கினார்கள் இல்லாததும் பொல்லாததும் சொல்லி கே.பி க்கு குழிபறித்து தாம் மட்டும் தான் விசுவாசிகள் என நிரூபித்து தமது காலை ஊன்றிக்கொண்டனர் . எமது தலைமை பீடமும் அப்போதிருந்த நிலையில் இவர்களை நம்பியது.
இருந்தும் அப்போதைய நிலைமைகளை நமது புலனாய்வு பிரிவினர் தேடியபொழுது சரியாகவே பட்டாலும் சிலர் அதை எதிர்த்தனர். அப்பொழுது இந்த நெடியவனும் காஸ்ரோவும் எம்முடன் இருந்து புலம்பெயர் தேசத்துக்கு எமது புலனாய்வு பொறுப்பாளர் ‘பொட்டு’ அம்மானால் கே.பி யின் நடவடிக்கைகளையும் புலம்பெயர் நடவடிக்கைகளையும் கவனிக்க நியமிக்கப்பட்டிருந்தனர்.
இவற்றை எல்லாம் செய்து கே.பியிடம் இருந்து புலம்பெயர் பொறுப்புகளை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்த இந்த இருவரும் எமது இரகசியங்கள் பலவற்றை கே.பி செய்வது போல வெளிவிட்டு மேலும் கே.பி க்கு எதிராக சாட்சியங்களை கொடுத்தனர். நீங்கள் கேட்கலாம் இவ்வளவு பெரிய வழர்ச்சி கண்ட எம் தலைமைப்பீடத்தால் இதை கண்டுகொள்ள முடியவில்லையா என. சரியான கேள்விதான்.
ஆனால் நாமே அவரை கவனிக்க சொல்லி நியமித்தவர்கள் பதவிக்காகவும் சொத்துக்காகவும் ஆடம்பர வாழ்வுக்காகவும் இப்படி செய்வார்கள் என எமது தலைமை நினைத்திருக்கவில்லை.மேலும் அப்பொழுது தான் நியமிக்கப்பட்டவர்கள் இவர்கள். .
இந்த நியமனமும் நெடியவன், காஸ்ரோ கே.பி யின் முரண்பாடும் தொடர்ந்ததால் கடைசிக்கட்ட யுத்தத்தில் நாம் மோசம் போனோம் என்பதே உண்மை
புலம்பெயர் தேசத்திலும் தமிழகத்திலும் நடைபெற்ற போராட்டங்கள்..
ஆம் வன்னியில் நாளும் ஆயிரம் பேர் செத்து மடிந்துகொண்டிருந்த பொழுது நமது நாடுகடந்த மக்கள் மிகப்பெரிய போராட்டங்களை தாம் வாழ்ந்துவரும் நாடுகளில் மேற்கொண்டுவண்ணம் இருந்தனர். இதற்கு நெடியவனும் கஸ்ரோவும் கே.பி யும் முன்னின்று செய்தனர். ஆனால் அது எப்படி நடந்தது என்பதை நீங்கள் கேளுங்களேன்
பாவம் புலம்பெயர் தேசமக்கள். குளிரிலும் பணியிலும் அந்த பாவப்பட்டமக்கள் நம்மினம் சாகுதே என தெருவில் இந்த நாடகம் நடத்தியவர்களை நம்பி இறங்கினர்.ஆனால் உலகமெங்கும் அந்த நபர்கள் நமது ஊடகங்கள் மூலம் பெரிதுபடுத்திக்காட்டியும் எமது தலைமைக்கு ஆயிரக்கணக்கான படங்கள் விடியோக்கள் என அனுப்பி வைத்து தாம் மிகப்பெரிய போர் ஜனநாயக ரீதியில் செய்து வருவதாகவும் காட்டிக்கொண்டனர். இந்த நாடகத்தின் விழைவு? தான் நம் அழிவு.[தொடரும்....]
ஆம் இவர்கள் எமது தலைமை பீடத்துக்கு அனுப்பிய தகவல்கள் மூலம் நாம் எப்படியும் உலகின் பார்வையை நம்மீது திருப்பி எப்படியும் நிபந்தனையற்ற ஒரு ஒப்பந்தத்துக்கு வரலாம் என நினைக்கவும் வைத்ததில் எந்த வித சந்தேகமும் இல்லை.
நாம் இப்படி இவர்களுடன் தொடர்பை கொண்டிருந்த போதும் தமிழ் நாட்டு தலைவர்களையும் தொடர்புகளை ஏற்படுத்திய வண்ணம் தான் இருந்தோம். யுத்தம் இறுதிக்கட்டத்தை தொட்டுவிட்டது இனி வெல்வதென்பது முடியாத காரியம்! எப்படியும் ஒரு போர் நிறுத்தத்தை செய்ய நடவடிக்கை எடுக்கும்படி நமது தலைமை இந்தியாவில் உள்ள தலைவர்களான கனிமொழி, திருமா,வைகோ.போன்றவர்களிடம் கேட்டுக்கொண்டோம் .அனால் அங்கிருந்து நல்ல பதில்கள் எதுவும் வராமலே காலம் கடத்தப்பட்டது. ஆனால் இந்திய ஒரு உடன்படிக்கையை செய்து அதன் மூலம் இலங்கை அரசின் கொலைவெறி யுத்தத்தை தடுத்து நிறுத்த ஒரு வழிவகுத்தது. ஆனால் அந்த வழி நமக்கு ஏற்றதாக இருக்காது என தெரிந்தும் அது பற்றி நடவடிக்கை எடுக்க நம் தலைமை பரிசிலனை செய்தது.
அதேவேளை இதோ செய்கின்றோம் இதோ செய்கிறோம் என்று நம்பிக்கையையும் தொடர்ந்து தந்துகொண்டிருன்தனர் இந்த நெடியவனும் காஸ்ரோவும். இவர்களது அந்த நம்பிக்கைக்கு காரணம் நோர்வேயும் ஒரு சில ஐரோப்பிய நாடுகளும் எமது தலைமை பீடத்தை காப்பாற்ற முன்வந்துள்ளதுடன் அனைத்து போராளிகளையும் பொதுமக்களையும் பாதுகாப்பாக தாம் பொறுப்பேற்று இலங்கை படைகளிடமிருந்து பாதுகாப்பதாகவும் தமக்கு உத்தரவாதம் அளித்துள்ளதாகவும் சொன்னார்கள். ஆனால் இந்த நேரம் கே.பி. மாற்று வழி ஒன்றை நம் தலைமை பிடத்துக்கு முன்வைத்தார். அந்த மாற்று வழி என்ன வென்றால்?
இறுதி வருடமான அந்த 2009 ஜனவரியில் இருந்து மே மாதம் வரை தலைமையையும் இயக்கத்தையும் மக்களையும் எப்படிப் பாதுகாக்க வேண்டும் என தலைவரால் புலம்பெயர் தேசத்தவர்களுக்கு கட்டளையிடப்பட்டது. அந்த நோக்கில் இந்த புலம்பெயர் தேச தலைமைகள் இரண்டு வழிகளில் நின்று முரண்பட்டு செயற்பட்டனர். நெடியவன் பக்கம் சொல்லப்பட்டது தான் நிபந்தனையற்ற ஒரு உடன்படிக்கை அதற்கு தாம் மக்கள் போராட்டம் மூலம் தீர்வு பெற்றுவிட்டதாகவும் அதற்கு தற்போது ஏற்பாடு நடப்பதாகவும் அதை கே. பி குழப்புவதாகவும் எமக்கு தகவல் வந்தது. மறுபக்கம் கே.பி
போரின் ஊடாக, வெற்றி பெற்றுப் பாதுகாப்பது, அல்லது ஒரு யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்திப் பாதுகாப்பது என்ற இருவழிமுறைகள் மூலமே இப்பொழுது செய்யக்கூடிய ஒரே வழி இதைத்தான் என்னால் இனிச்செய்ய முடியும் நான் இதற்காக இந்தியாவின் தலைவர்கள் பலருடனும் எரிக்சொல்கேம், மற்றும் பல அரசியல் தலைவர்களுடனும் கதைப்பதற்கு முயற்சி செய்துவருகிறேன் என்றும் கூறினார் .
போரின் மூலம் சமர்களில் வென்று பாதுகாப்பதற்கு காலம் மிகவும் பிந்தி விட்டது என கேபி எம் தலைமைக்கு கூறிவிட்டு மாற்று வழியாக அவர் போர் நிறுத்தம் ஒன்றை செய்ய நடவடிக்கை எடுக்க செய்வதாக உறுதி அளித்தார்[தொடரும்....]
உண்மையில் அப்போது எம்மிடம் போதிய எறிகணைப்பலம் இல்லை. இத்தகைய ஒரு சூழலில் தலைவரையும், இயக்கத்தையும் மக்களையும் பாதுகாப்பதற்கு ஒரு யுத்த நிறுத்தம் அவசியம் எனவும் அதற்கு வரும்படியும் எமது தலைமை பிடத்தை வலியுறுத்தினார்.
ஆனால் நமது தலைமை ஒரு நிபந்தனையற்ற யுத்தநிறுத்தத்துக்குத் தயாராக நாம் இருப்பதாக அறிவுறித்தியது. ஆனால் நிபந்தனை அற்ற யுத்தநிறுத்தத்தை எமது தலைமை தெரிவி செய்ததற்கும் இந்த நெடியவனும் காஸ்ரோவும் தான் காரணம்.
அவர்கள் இருவரும் எமது தலைமை பீடத்துக்கு சொன்ன அந்த நம்பிக்கைதரும் செய்தியான ஐரோப்பிய நாடுகள் காப்பாற்ற ஒத்துவருவதாக கூறியுள்ளார்கள் என்ற செய்தியை நம் தலைமை நம்பியது. இதை நம் தலைமை நம்முவதற்கு காரணம் இவர்கள் இருவர் மீதும் இருந்த நம்பிக்கையும் புலம்பெயர் தேசத்தில் நடந்ததாக எமக்கு அனுப்பப்பட்ட ஆதாரங்களும் தான் காரணம்.
நிபந்தனையற்ற யுத்த நிறுத்தத்தை அனைத்துலக சமூகம் ஏற்றுக்கொள்ளவில்லை. அப்படி இருந்தும்
எவ்வாறு யுத்த நிறுத்தத்தைக் கொண்டு வருவது என்பதுபற்றி பேச்சுக்கள் நடந்துகொண்டுதான் இருந்தது.
நிபந்தனையற்ற யுத்தநிறுத்தத்ததைக் கொண்டுவருதற்கான சாத்தியங்கள் இல்லாத பொழுது யுத்த நிறுத்தத்தைக் கொண்டு வருவதற்கு தந்திரோபாய விட்டுப்கொடுப்புக்களைச் செய்வதில் தவறில்லை என மறுபடியும் கே.பி ஊடாக பாதிரியாரும் இந்திய தலைவர்களும் நோர்வேயும் தெரிவித்தார்கள். இதற்கான திட்டம் ஒன்றையும் தலைவரிடம் முன்வைத்தனர் கே.பி ஊடாக இந்தியவின் நிகழ்ச்சி திட்டத்தின்படி.
இத் திட்டத்தின்படி எமது ஒரு பகுதி ஆயுதங்களை இயக்கக் கட்டுப்பாட்டுப் பகுதியில் ஐ.நா.சபையின் மேற்பார்வையில் ஒப்படைப்பது எனவும் அதன் தொடர்ச்சியாக யுத்த நிறுத்தம் சமாதானப் பேச்சுவார்த்தைகளையும் நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கு முயற்சிப்பது.
இதுவே கேபி ஊடாக இந்திய பாதிரியாரும் கனிமொழியும் மத்திய அமைச்சரான சிதம்பரத்துடன் கதைத்து எடுத்ததாக சொல்லப்பட்ட கருத்து.
நயவஞ்சகர் கூட்டம் தொடங்கிய திட்டம்.
அழிந்து போகக்கூடிய ஆபத்து இருக்கும் ஒரு சூழலில், அழிவில் இருந்து பாதுகாத்துக் கொண்டு அடுத்து கட்டம் பற்றிச் சிந்திக்கலாம் எனவும் அவர்கள் சொன்னதாகவும் கூறினார்.
இந்த செய்தியை வேறு நடைமுறைப்பிரச்சினைகளைக் கொண்டுவரும் என்ற காரணத்தைக்கூறித் தலைவர் அதற்குச் சம்மதிக்கவில்லை.
தாம் புலத்தில் ஒழுங்கு செய்து கொண்டிருக்கும் போராட்டங்கள் நிபந்தனையில்லாமலே யுத்தநிறுத்தத்தைக் கொண்டுவருவோம் என இந்த நெடியவனும் காஸ்ரோவும் வன்னிக்கு அனுப்பிக் கொண்டிருந்த தகவல்களும் எமது தலைமையின் முடிவில் செல்வாக்குச் செலுத்தின உண்மையே .
இவர்களது இந்த பொய்யான தகவல்களால் பல முயற்சி செய்து பார்த்து இருக்கக்கூடிய வெவ்வேறு வாய்ப்புக்களும் இல்லாது போனது.[தொடரும்....]
இது இப்படி இருக்க!ஒருபக்கம் சமாதானத்துக்கும் பாதுகாப்புக்குமான பேச்சு வார்த்தை நடந்தவண்ணம் தான் இருந்தது மறுபக்கம் தற்காப்பு யுத்தம் நடை பெற்றுக்கொண்டு இருந்தது. இந்த நேரத்தில் நமக்குள்ளேயே வன்னியிலிருந்து எம்மை குழிபறித்து நம் தளபதிகள் கோரமாக படுகொலை செய்யப்பட்டதை பார்த்தால் எம்மினத்தின் விடியலுக்காக போராடி மாற்றானுடன் சேர்ந்து எமக்கு குழிபறித்தவர்கள் வரிசையில் இப்போது மீண்டும் சிலர் இணைந்து கொண்டு அந்த கொடிய போரில் நாளும் ஆயிரமாயிரம் பேர் செத்து வீழ்ந்து கொண்டிருப்பதையும் பொருட்படுத்தாது எமது போராட்டத்தையும் தலைமையையும் பயங்கரவாதிகள் எனவும் அதை பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தமாக சிங்களவனுடன் சேர்ந்து திசை திருப்பவும் இந்த கூட்டம் பாப்பா என்னும் ஒரு தளபதியூடாக மறுபடியும் அரங்கேறியது.
ஆம்
அன்று எம் தலைமை பீடத்தை பாதுகாக்க ஒரு வழி அமைக்கவேண்டும் என்ற கட்டாயத்துக்குள் எம் தலைமைப்பீடமும் போராளிகளும் தளபதிகளும் தள்ளப்பட்டனர். அதை நிறைவேற்றுவதற்காக நம் தீபன் [தாங்கோ பாப்பா]அண்ணா தலைமையில் புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்தில் ஏப்ரல் 1ம் திகதி பல படையணித்தளபதிகளுடன் சேர்ந்து படையினருக்கெதிராக பாரிய முறியடிப்புச் சமர் ஒன்றைநடத்தினோம் .
ஆனால் நாம் நினைத்ததை எப்படியு முற்கூட்டியே அறிந்திருந்த படையினர் நாம் தாக்குதலை தொடங்கிய சில மணி நேரத்தில் பின்வாங்கி சென்றனர். சுமார் 2 கிலோமீட்டர் தூரம்வரையான நிலப்பரப்பை எமது படைகள் மீண்டும் கைப்பற்றியது
அந்த போரில் எமது ஒட்டுமொத்த தளபதிகளும் பங்குபற்றினர் அண்ணன் தீபன் தலைமையில். இந்த தாக்குதலில் தீபன் விழுப்புண் அடைந்த போதும் அதைக்கூட பொருட்படுத்தாது களத்தில் நின்று கட்டளை பிறப்பித்தவண்ணம் இருந்தார். இந்த வெற்றி எம்மை ஓரளவு மனவலிமைக்கு மீண்டும் கொண்டுவந்தது .
எப்படியும் எம் தலைமை பீடத்தை காப்பாற்றி வேறு ஒரு இடத்துக்கு கொண்டு செல்ல முடியும் என்றும் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ள ஒரு நல்ல சந்தர்ப்பம் வந்து விட்டது எனவும். ஆனால் அதுதான் எம் போராட்டத்தின் முடிவு களமாகவும் அமைந்துவிட்டது என்பதுதான் கொடுமை.
இந்த வெற்றியை நாம் அந்த காலகட்டத்தில் பெறுவதற்கு சுமார் நூருக்கும் மேற்பட்ட போராளிகளை இழந்து தான் பெற்றோம். ஆனால் நம் வாழ்வில் மண்ணை அள்ளி போட்ட இந்த கூட இருந்து குழி பறித்த பாப்பா எப்படி தனது காய் நகர்த்தலை செய்தார் என்பதை சொல்லுகிறேன் கேளுங்கள்…
ஆம்! பாப்பா நமது மூத்த தளபதிகளில் ஒருவர்தான். அவர் சமாதானக்காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டு நல்ல சுகபோகமாக வாழ்வை அனுபவித்து வந்ததை யாரும் மறக்க மாட்டார்கள். இந்த சுகபோக அனுபவிப்பால் பல பெண்களுடன் இவர் தொடர்பு கொண்டமையால் மறுபடியும் வன்னிக்கு அழைக்கப்பட்டு கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தார். இவர் நமது விளையாட்டு துறைப்பொருப்பை கவனித்து வந்தவர்.
இப்படி அந்த சமாதான காலகட்டத்தில் இவர் யாழ்மாவட்ட புலனாய்வுத்துறையினருடன் நன்கு தொடர்பை கொண்டுள்ளார் என அப்போது யாழப்பானத்திலிருந்த மற்றைய பொறுப்பாளர்கள் மற்றும் இரகசிய புலனாய்வுத்துறையினர் தகவல் கொடுத்தமையால் இவர்மீது எம்
தலைமைக்கு ஒரு கண் இருந்தது
ஆனாலும் அவர்மீது நடவடிக்கை எடுக்க அப்போது நமக்கு போதுமான உறுதிமிக்க தடையங்கள் கிடைக்கவில்லை. மேலும் மூத்த தலைவர்கள் மீது உறுதியான சாட்சியம் இல்லாமையால்
நடவடிக்கை எடுக்க எம் தலைமை பீடம் சற்று தயங்கியது, காரணம் மறுபடியும் எமக்குள் ஒரு பிரிவு ஏற்படுவதை தலைமை விரும்பவில்லை. [தொடரும்.....]
இது பழைய கதை. ஆனால் இதில்தான் தொடர்பு இருக்கின்றது இந்த குழி பறிப்பில்.
இந்த நிலைமையில் யுத்தம் நம்மை நெருங்கிக்கொண்டுவந்த வேளையில் இந்த பாப்பாதான் மக்களை வழிப்படுத்தும் நடவடிக்கைகளை துல்லியமாக செய்துவந்தமையால் அவரிடமே நம் தலைமை அந்த பொறுப்பை ஒப்படைத்தது.
மக்களும் நாம் போகும் திசை எல்லாம் வந்தார்கள். இந்த மக்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் போதுதான் பாப்பாதனது கைவரிசையை காட்டி நமது தலைமை மீதும் போராளிகள் மீதும் அபாண்டமான குற்றச்சாட்டுக்களை உலகத்தின் முன் இந்த கொடிய சிங்கள தேசம் முன்வைக்க உதவி புரிந்தார்.
ஆம் சிங்கள படைகளுடன் சேர்ந்து இயங்கிவந்த கருணா குழுவினருடன் இந்த பாப்பா தொடர்பு கொண்டு நாம் இப்போது இந்த இடத்தில் நிற்கின்றோம் அந்த இடத்தில் நிற்கின்றோம் என உடனுக்குடன் தகவல்களை கொடுத்து நம் நிலைகள் மீது விமானம் மூலமும் எறிகணை மூலமும் துல்லியமாக் தாக்குதலை படையினர் நடத்த உள்ளுக்குள்ளேயே இருந்து தகவல்களை கச்சிதமாகக்கொடுத்துக்கொண்டிடுந்தார்.
அதன் விளைவுதான் நம் அண்ணன் தீபன் உட்பட சுமார் 287 போராளிகள் ஒரே நேரத்தில் சிங்களவன் வீசிய எரிகுண்டுக்கு இரையாகி கருகி சாவடைந்தனர். இதில் நம் இரண்டாம் நிலை தளபதிகள் ஐம்பதுக்குமேற்பட்டவர்கள் மரணமடைந்தனர்.
திட்டமிட்டு காலம் வரும்வரை காத்திருந்து குழிபறித்த பாப்பா
மக்களை தன்னுடன் வைத்திருந்த து மட்டுமல்லாது ஏற்கனவே தனக்கு நெருக்கமான சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட போராளிகளை தனது கட்டுப்பாடுக்குள் வைத்திருந்து கொண்டதனால் நமது தலைமையால் அவனை உடனடியாக நெருங்க முடியவில்லை.
இந்த பாப்பாவை எப்படியாவது அகற்றவேண்டும் என தலைமை நினைத்து நமது சிலபோரளிகளை அந்த மக்கள் கூட்டத்துக்குள் அனுப்பிவைத்தது. இதனை அந்த பாப்பா அறிந்து கொண்டதனால் அந்த போராளிகளை மக்கள் முன்சுட்டு கொன்றுவிட்டு மக்களுக்கு ஒரு கதை விட்டான் இவர்கள் துரோகிகள் எங்களை அழிப்பதற்காக சிங்களவனின் கைக்கூலிகளாக வந்தவர்கள், அதனால் தான் சுடுகின்றோம்.
இதனால் நம் போராளிகளுக்குள்ளேயே ஒரு பிளவு ஏற்படத்தொடங்கியது. அதனால் நம் தலைமை பீடம் முக்கியமான போராளிகள் தவிர்ந்த மற்றைய அனைவரையும் ஆயுதங்களை வைத்துவிட்டு மக்களுடன் சேர்ந்து கொள்ளுமாறு பணித்துவிட்டது.
இதன் பின் அந்த பாப்பாவை நம் தலைமை பீடத்தால் கட்டுப்படுத்த முடியாமல் போனது உண்மையே.
இதனை பயன்படுத்திக்கொண்ட அவன் தனக்கு எதிரான சாதாரண பொதுமக்களையும் சுட்டுவிட்டு தப்பித்து போக பார்த்தவர்கள் என்றும் புலிகளுடன் முரண்டு பிடிக்கும் கும்பல் அதனால் புலிகள்தான் சுடுகின்றனர் என்றும் தகவல்களை சிங்களதேசத்துக்கு கொடுத்து வெளியிட்டது மட்டுமல்லாது வன்னி மக்களையும் புலிகளிடமிருந்து பிரிக்க நல்ல திட்டத்தை சிங்கள தேசத்துடன் இருந்து செய்து சிங்கள இராணுவத்தின் உத்தரவின் பேரில் படுகொலை செய்து விட்டு புலிகள் தான் தமது சொல்லைக்கேட்காத மக்களை கொலை செய்வதாக வெளி உலகுக்கும் செய்தியை பரப்பினார்கள்.
அதுமட்டுமல்ல நம்முடன் இருந்த அந்த அப்பாவி மக்களுக்கு அப்போது தெரியாது இந்த பாப்பாவும் அவனுடன் சேர்ந்து கொண்டு இருந்த அந்த போராளிகளும் சிங்களவன் கைக்கூலியாக இப்போது சேயற்பட்டு கொண்டிருப்பதை .அதுவரை நாளும் பாப்பாவும் புலிகளின் முக்கிய உறுப்பினர் தானே .
அதனால் அந்த மக்கள் புலிகள் தான் மக்களை கொள்கின்றார்கள் என புலிகள் மீது கடும் கோபம் கொண்டதும் உண்மைதான். இந்த பாப்பா என்ற ஒரு தனி நபர் தனக்கு நல்ல வாழ்வு தருவதாக சொன்ன அந்த சிங்களவனின் சொல்லுக்காக, கூட இருந்த போராளிகளை மட்டுமல்ல தன் இன மக்களையுமே கதறக்கதற படுகொலை செய்து கொண்டான் .
இதைவிட இன்னுமொரு செய்தியையும் சொல்ல விரும்புகின்றேன்.
அதாவது நீங்கள் இப்பொழுது அறிந்துகொண்ட இசைப்பிரியா கொலைக்கும் இவன்தான் சூழ்ச்சி செய்து கொடுத்தான் என்பது ஒரு சிலருக்கே தெரிந்த உண்மை.
ஆம்!
எம் இனத்தின் அவல நிலைமைகளை வெளி உலகுக்கு கொண்டுசெல்லும் ஊடகப்பிரிவிலும் கலை பண்பாட்டுக்கழகத்திலும் தன்னை நிலைநிறுத்திக்கொண்டு போராடிய அந்த இசைப்பிரியா ஒரு போராளியின் மனைவி. ஒரு குழந்தையின் தாய். இப்படிபட்ட அந்த பெண் தனது கணவனை முதலில் ஒரு சம்பவத்தில் இழந்து பட்டமரமாகி தானும் தன் குழந்தையும் என இருந்தவளுக்கு மறுபடியும் ஒரு இழப்பு ஆம் அவழ் குழந்தையையும் அந்த கொடிய கடவுள் எறிகணைத்தாக்குதல் மூலம் எடுத்துக்கொண்டான்.
அவள் தனிமரமாக நின்றவேலையில் அப்போதைய கடுமையான களநிலைமையால் ஆயிரக்கணக்கான மக்களும் போரளிகளும் காயப்பட்டும் கொல்லப்பட்டும் கொண்டிருந்த பொழுது அவர்களுக்கு மருத்துவ உதவி செய்வதற்காக தன்னை மருத்துவ பிரிவினருடன் இணைத்துக்கொண்டாள்.
இப்படி மருத்துவ உதவி செய்ய சென்ற அந்த போராளியை சூசகமாக கைதுசெய்து கொடுத்தான் இந்த பாப்பா.
ஆம். இறுதி யுத்தம் நடந்து கொண்டிருந்த பொழுது வீதிகளிலும் காணிகளிலும் பல்லாயிரக்கணக்கானவர்கள் காயப்பட்டிருந்தபொழுது அவர்களை மீட்கும் பணியில் இவளும் இன்னும் பலரும் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர் .
இந்த பாப்பாவின் பிடிக்குள் மக்கள் அதிகமானோர் அதுவும் இராணுவ எல்லைகளில் இருந்ததால் அங்கு காயப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி செய்ய சென்றிருந்த வேளையில் சில முன்னரங்க பாப்பாவின் நபர்களுடன் இவள் வாய்த்தர்க்கம் செய்து அந்த மக்களை காப்பாற்ற சென்றுள்ளாள், இவளை பழிவாங்க நினைத்த பாப்பா கும்பல் திட்டமிட்டு ஒரு நாடகம் ஆடினார்கள்.
ஆம் சிங்கள இராணுவத்துக்கு இப்படி ஒரு பெண்ணின் தலைமையில் நான்கு பெண்கள் முன்னரங்க நிலைகளில் மருத்துவ முதலுதவி செய்வதுமட்டுமல்ல புகைப்பட தகவல்களையும் சேகரிக்கின்றனர்.என சிங்களபடைக்கு சொல்லப்பட்டது.அதற்கு சிங்கள இராணுவம் வகுத்த நாடகம் தங்களுடைய இருவரை வீதியில் காயப்பட்டு துடிப்பவர்கள் போல நடிக்கவைத்து இவர்களை அந்த பக்கம் வரவழைத்து சூழ்ச்சி செய்தனர். இவளுடன் சென்று தப்பிவந்த பாரதி என்ற போராளி எமக்கு சொன்ன தகவல் இது. ஆனால் இப்பொழுது அந்த பாரதியும் உயிருடன் இல்லை.
ஆனால் நாம் அப்பொழுது நினைத்தது இசைப்பிரியா சுடப்பட்டு அந்த இடத்திலேயே இறந்துவிட்டதகத்தான்.
ஆனால் இப்போது அறியும் தகவல் நெஞ்சை உறையவைத்துள்ளது.
இதைவிட இராணுவம் அமைத்துக்கொடுத்து மக்களை வந்து பாதுகாப்பாக இருக்கும்படி சொன்ன பாதுகாப்பு வலயங்களுக்குள் எல்லாம் மக்கள் சென்று தஞ்சமடைந்த பொழுது அங்கு போராளிகள் பலர் தமது குடும்பத்துடன் சேர்ந்திருந்தனர். அதைக்கூட இவர்கள் சொல்லிக்கொடுத்தனர் புலிகள் தலைவர்கள் சிலர் பாதுகாப்பு வலையத்துக்குள் வந்து மக்களுடன் தஞ்சம் அடைந்து இருக்கின்றார்கள் என்பதனை இதை பயன்படுத்திய இராணுவம், விமானம் மூலமும் எறிகணை மூலமும் அந்த பாதுகாப்பு வளையங்களையும் துல்லியமாக தாக்கி எம்மக்களை கொன்று குவித்தது.
பாருங்கள் எப்படி எல்லாம் நாம் அழிக்கப்பட்டோம் என்று.[தொடரும்.....]
சரி இனி எப்படி நம்மை சரணடைய வைத்து மோசம் செய்தனர் என சொல்லுகிறேன்
இறுதி போரின் இறுதி நாட்களில் இந்தியாவுக்கும், நமது தலைமைக்கும் நடந்த பேச்சுக்களில் கலந்து கொண்ட பாதிரியார் காஷ்பார் . போரை நிறுத்த புலிகளிடம் சில நிபந்தனைகளை முன்வைத்தார்.
எமக்கு 48 மணி நேரத்துக்குள் யுத்தநிறுத்தம் செய்யப்படும் என்று சொல்லப்பட்டது. அதுமட்டுமல்லாது தமிழ் மக்களுக்கு நிரந்தரமான தீர்வு வரும்பொழுது ஆயுதங்களை ஒப்படையுங்கள் என்றும் சொல்லப்பட்டது. இந்த நிபந்தனை விதிபோடு ,
தலைவர் (பிரபாகரன்) சரணடைய வேண்டும் பொட்டு அம்மான் சரணடைய வேண்டும்’ இன்னும் முக்கிய புலிகள் உறுப்பினர்கள் தம்மிடம் சரணடைய வேண்டும் என்று எந்த நிபந்தனையும் அப்போது விதிக்கப்பட்டது.
பின் உடனடியாக ஆயுதங்களை ஒப்படைக்க தயாராக இருங்கள் என்று வற்புறுத்தினார்கள்.
இவர்களது இந்த நிபந்தனைகளை நம் தலைமை பீடம் ஏற்றுக்கொள்ளவில்லை .இதற்கு காரணம் அந்த நெடியவுனடைய காஸ்ரோவினுடையதுமான ஐரோப்பிய நாட்டு உதவியுடன் கப்பல் அல்லது ஆகாய மூலமாக தலைவர்கள் காப்பாற்றப்படுவார்கள் என்ற அதீத நம்பிக்கைதான். ’
ஆனால் இலங்கை அரசு எந்தவிதமான சமாதானத்துக்கும் முன்வருவதாக இல்லை என்று எமக்கு நமது நாடுளுமன்ற உறுப்பினர் ஒருவர் சொன்னார். .
உண்மையில் “கடைசி நாளில் தலைவர் பிரபாகரனும், அதிமுக்கிய தளபதிகள் சிலரும் களத்தை விட்டு அகன்ற பின் காயமடைந்த போராளிகளை அப்புறப்படுத்திக் காப்பாற்றும் முடிவை எடுத்து அதற்காக புலிகளின் கடற்படைத் தளபதி சூசை மதுரை நபர் சு.ப.வீயைத்தொடர்பு கொண்டார்
கனிமொழியின் உதவியோடு சிதம்பரத்துடன் பேசி போர்நிறுத்த நடவடிக்கைக்கு இலங்கையை வற்புறுத்தியுள்ளதாகவும் இதனால் “புலிகளின் அப்போதைய அனைத்துலகப் பொறுப்பாளர் கே.பி கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவரிடம் நாம் ஆயுதங்களை ஒப்படைக்கத்தயார் என்று எழுத்துமூலமாக உடனே கொடுக்கவேண்டும் என்றும் மற்றைய அனைத்தையும் இந்தியா மேற்கொள்ளும் என்றும் அந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பாதிரியார் எமக்கு அறிவித்தார்.
மக்களின் நலனுக்காகவும் போராளிகளின் பாதுகாப்புக்காகவும் நமது புலம்பெயர் தேச தலைவர்களின் நகர்வுகளின் நம்பகம் இல்லாமையாலும் நமது தலைமை உலகத்தின் இந்த நிபந்தனையை ஏற்று தலைவர்களில் ஒருபகுதியினர் முதலில் சரணடைவர் என்றும் பின் அடுத்தகட்டம் பற்றி சொல்லுவதாகவும் உடனடியாக இதை செய்ய நடவடிக்கை எடுக்கும்படி பாதிரியாருக்கும் கே.பி க்கும் நமது தலைமை சார்பில் நடேசனால் கூறப்பட்டது. .
இதனால் கே.பி ஆயுதங்களை இந்தியாவிடம் ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும், அது சாத்தியமில்லை என்றால் ஐ.நா ஏற்பாட்டில் ஒப்படைக்கிறோம்’ என்றும் சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவித்தார். .
இந்தியா, அல்லது ஐ.நா.வின் முன்னிலையில் ஒரு தொகுதி பொறுப்பாளர்கள் முதலில் சரணடைவது என்ற புலிகளின் முடிவைச் கே.பி சொன்ன பொழுது,கால அவகாசமில்லை. இந்தியாவிடம் சரணடைவதற்கான சாத்தியப்பாடுகள் இப்பொழுது இல்லை. இலங்கை ராணுவத்திடமே சரணடைவதுதான் தற்போது சாத்தியமானது அதற்கு சம்மதமா? என நமது தலைமையை கேட்கும்படி சிதம்பரம் கூறியதாக ’மறுபடி சில மணித்தியாலங்களில் எமக்கு அந்த பாதிரியார் மூலம் செய்தி வந்தது.[தொடரும்...]
பலதரப்பட்ட விவாதங்களின் பின் நமது தலைமை மக்களைளையும் போராளிகளையும் காயப்பட்டவர்களையும் காப்பாற்றும் பொருட்டு, இலங்கை ராணுவத்திடமே சரணடைவது என்ற முடிவை நமது தலைமை எடுத்தது. ஆனால்இது நடைபெறுவதற்கு முன்
நமது தலைமை,எமது சார்பாக மேற்குலக அரசுகளுடன் இறுதி நேர தூதுவராகச் செயற்பட்ட மேரி கொல்வினின் . என்ற ஒருவர்மூலம்.
நாங்கள் எமது ஆயுதங்களைக் கீழே வைக்கிறோம் என்று நடேசன் மூலம் சொல்லியதுடன் அதற்கு அமெரிக்காவிடமிருந்தும் பிரித்தாநியாவிடமிருந்தும் பாதுகாப்புக்கான உத்திரவாதத்தை நமக்கு பெற்றுத்தரும்படி கேட்கப்பட்டது.’. இலங்கை ராணுவத்திடம் சரணடைவது மிகவும் அபாயகரமானது என்றும் இதற்கு காரணம் எமது சார்பில் சொல்லப்பட்டது.
மேலும் நாம் எமது சமாதானச் செயலகத்தைச் சார்ந்த புலித்தேவன், நடேசன் போன்ற அரசியல் மற்றும் சமாதானச் செயலகத்தைச் சார்ந்த300..400 வரையான போராளிகளையும் காப்பாற்றுவதே எமது நோக்கமாக அப்போது இருந்தது. இதற்கு தலைவர் நேரடியாகவே உத்தரவு பிறப்பித்தும் இருந்தார் .அத்தோடு சில விடயங்களை ஐ.நா.விற்கு தெரிவிக்குமாறு நடேசன் மூலம் கோரப்பட்டது.
நாம் ஆயுதங்களைக் கீழே வைக்கின்றோம் எமக்கு ஒரு தீர்வு கிடைக்கவழி செய்தால் அவர்களிடம் நமது மற்றைய தலைவர்கள் சரணடைவது பற்றி கூறப்படும் ,
அமெரிக்கா அல்லது பிரித்தானியாவிடம் இருந்து பாதுகாப்புக்கானஉறுதி தரவேண்டும் எமது மக்களின் உரிமைகளை உத்தரவாதப்படுத்தும் அரசியல் தீர்வுக்கு இலங்கை.
அரசாங்கத்தை இனங்கச்செய்ய வேண்டும் என இன்னும் சிலவற்றை இந்த உறுதிமொழிகளை புலிகள் சார்பாக நாம் அவரிடம் நடேசன் மூலம் கோரியிருந்தோம். .”
இது அனேகமாக 15 . 05.2009 நடைபெற்றதாக நினைக்கின்றேன் ஆனால் நமது தலைமை சரணடையும் என்று எவருக்கும் நாம் எப்பொழுதும் சொல்லியிருக்கவில்லை.
அதன்பின் ஐ.நா.வின் ஆசியாவுக்கான தூதர் விஜய் நம்பியாருடன் மேரி கொல்வினுக்கு தொடர்பை ஏற்படுத்தி நமது நிலைப்பாடான ஐ.நா.வின் உத்திரவாதத்தில் ஆயுதங்களை ஒப்படைக்கும் முடிவை விஜய் நம்பியாரிடம் சொல்லி அந்த விஜய் நம்பியாரிடம் இருந்து சரணடைவதற்கான உத்தரவாதத்தை பெற்று நமது தலைமை பீடத்துக்கு “நடேசனும், புலித்தேவனும் சரணடைந்தால் பாதுகாக்க தாம் இலங்கையுடன் தொடர்புகொண்டு பேசியதாகவும் அவர்கள் ஐநாவுக்கு உறுதியளித்துள்ளார்கள் என்றும் இலங்கை சார்பில் பாதுகாப்பு செயலருடன் பேசி முடிவெடுக்கப்பட்டதாகவும் நமது தலைமைக்கு அவசரமாக தகவல் சொன்னார்.
இது இவ்வாறிருக்க சமாதான முயற்சியில் ஈடுபட்ட இன்னொருவரான சந்திரநேரு இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருடனும் நாம் பேசி இதுபற்றி கேட்டபோது அதுபற்றி அவர் தனக்கு தெளிவாக தெரியாது என அப்பொழுது சொன்னார்.[தொடரும்...]
இந்த இறுதி நேர முடிவுகள் அனைத்தையும் இந்தியா தான் எடுத்தது. இந்த முடிவை ஏற்கச் சொல்லி ஜெகத் கஸ்பர் மூலமாக கே.பி.யை நிர்ப்பந்தித்தார்கள் இந்த பாதிரியும் சிதம்பரமும் சேர்ந்து .
இந்தியாவின் விருப்பங்களை மீறி ஐ.நா.மற்றும் மேற்குலகம் இலங்கையில் எதையும் செய்துவிடாது என்பது நமது தலைமைக்கு நன்கு தெரிந்த விடயம்தான்.
ஆனாலும் இறுதி நேரத்தில் மேற்குலக நாடுகள் மூலமாக கே.பி.யும் புலம்பெயர் தேசமும் எடுத்த முயற்சிகளினூடாக கொழும்புக்கு வந்தார் விஜய் நம்பியார். இவருடைய தம்பி சதீஷ் நம்பியார் இலங்கை ராணுவ ஆலோசகராக இருக்கின்றார் என்பதும் நமது தலைமைக்கு நன்கு தெரியும்.ஆனால் கொழும்பு சென்ற விஜய் நம்பியார் வந்து சில மணிநேரங்களில் இந்தியாவின் வற்புறுத்தலில் திரும்பி சென்று விடுகின்றார். இதை அப்பொழுது நமக்கு கொழும்பிலிருந்து தரா என்ற குறியிட்டு பெயர் கொண்ட ஒருவர் தெரிவித்தார். இதில் எமக்கு சந்தேகம் ஏற்பட்டுவிட்டது. ஆனாலும் என்ன செய்வது ?? இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு தடையாக இருக்காமல் அவர் சென்று விட்டார் என்பதே உண்மை .
மேலும் இலங்கை படையினரிடம் சரணடையுங்கள் என்று எம்மை நிர்ப்பந்தித்துக்கொண்டே, மேற்குலகின் தலையீடு கடைசி நேரத்தில் கூட வந்து சேரக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருகிறது இந்தியா என்றும் அவர் சொன்னார்.
ஜெகத் கஸ்பர் என்ற பாதிரியார் மூலமாக இந்தியா பார்த்துக் கொள்ளும் என்ற பொய்யான உறுதிமொழி எம் தலைமைக்கு வழங்கப்பட்டு இந்த உறுதிகளை நம்பித்தான் வெள்ளைக் கொடியோடு சிங்களப் படைகளிடம் சரணடையா நடேசன் தலைமையில் போராளிகள் தெரிவு செய்யப்படுகின்றனர்.
தூக்கமின்மை உணவின்மை, வலுவிழந்துவிட்டோம் , காயமடைதல், எங்கும் சிதறிக் கிடக்கும் மக்களின் பிணங்கள் என எல்லாம் எம்மை உளவியல் ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் வெறுப்படைய வைத்துவிட்டது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட இந்திய அரசு, நாம் கூறிய ஆயுதங்களை மவுனிக்கச் செய்கிறோம். காயமடைந்தவர்களைக் காப்பாற்ற உதவுங்கள்” என்ற கோரிக்கையை ‘ஜெகத் கஸ்பர்ராஜ் என்ற பாதிரி மூலம் செயற்படுத்தவருகிறது.
நமது தலைமை முதலில் சரணடைய மறுத்தாலும் பின்னைய நாட்களின் பல்வேறு நாட்டு வற்புருத்தல்களாலும் நம்பியாரினதும் இந்தியாவினதும் உத்தரவாதத்துக்கு அமையவும் சரணடைய ஒரு தொகுதியினருக்கு அனுமதி வழங்கியது. இது நாம் அரசியல் வழிக்கு வருவதற்கான ஒரு நகர்வாகவே அரசியல் பிரிவினரை சரணடைய செய்தது எம்தலைமை.
மறுபுறத்தில் சூசை இந்திய தலைவர்கள் சிலரிடம் “காயமடைந்திருக்கும் போராளிகளையாவது வட்டுவாகல் வழியாக மீட்கும் கோரிக்கையைத்தான் சூசை கேட்டுக்கொண்டார். . அதுவும் நடைபெறவில்லை.
13ஆம் தேதி அதிகாலை கடற்படையும் தரைப்படையும் முள்ளிவாய்க்கால் கடற்கரையில் ஒன்று சேர்ந்ததோடு எமது படைகளும் மக்களும் சுற்றி வளைக்கப்பட்டு விட்டோம் . தப்பிக்க இருந்த வாய்ப்புகளும் இல்லாது போனது . .
இருந்தும் நாம் ஆயுதங்களை போடவில்லை. காயமடைந்தவர்களைக் காப்பாற்றுங்கள் என்று பாதிரியாரிடமும் கனிமொழியிடமும் கேட்டோம் .இந்த நேரத்தில் நீடித்துக் கொண்டிருக்கும் போரை முடிவுக்குக் கொண்டு வர விரும்பிய இந்தியா, ஜெகத் கஸ்பரைப் பயன்படுத்தி காரியத்தை முடித்துக்கொண்டது என்பதுதான் உண்மை.
வெள்ளைக் கொடியேந்தி சரணடையும் முடிவு இந்தியாவின் உத்திரவாதத்தின் பேரில் எம்மால் ஏற்கெனவே எடுக்கப்பட்டு விட்டது. இது விஜய் நம்பியார் மேரி கொல்வின் ஊடாக தந்த உத்தரவாதத்தின் பேரில் நடைபெற்றது.[தொடரும்....]
ஆனால் ஜெகத் கஸ்பாருக்கும் நமது புலம் பெயர்ந்த சில தலைவர்களுக்கும் இந்தியா செய்யவுள்ள நடவடிக்கைகள் பற்றி தெரிந்திருந்தும் நமக்கு அப்பொழுது அறிவிக்கவில்லை. நமது சிலரதும் இந்தியாவினதும் சூழ்ச்சி அறியாத கே.பி. நம்மை வற்புறுத்தி சம்மதிக்க வைத்தார்.
இதற்கிடையே இலங்கை எந்தவொரு நாட்டுக்கும் பணிய மறுத்துவிட்டது என்பது உண்மை. அது யாரையும் அப்பொழுது கண்டுகொள்ளவில்லை. இந்தியா கூட கடைசி நேரத்தில் சில நகர்வுகளை செய்ததாக சொல்லப்பட்டது. அதாவது மக்களை மட்டும் காப்பது என்பதுபற்றி. ஆனால் சீனாவின் ஆதரவால் இலங்கை அதை மறுத்துவிட்டது.
இலங்கை எவருக்கும் உறுதி மொழி வழங்கவில்லை என நமக்கு கடைசி நேரத்தில் புலம்பொயர் நாட்டிலிருந்து கே.பி சொன்னார். அதுவரை இந்த விடையம் அவரை சென்றடைய இந்த காஸ்ரோவும் நெடியவனும் பாதிரியாரும் விடவில்லை.
இவர்களது நயவஞ்சகத்தால், நாம் நம்பி அனுப்பிய நம் போராளிகளான நடேசன், புலித்தேவன், ரமேஷ், இளங்கோ, குமரேஷ், பிரியா, சுதர்மன், தாமஸ், சுடர், பாலா, லக்ஷ்மன், சிறிராம், இசை அருவி, கபில் அம்மான், அஜந்தி, தூயவன், ஜெனார்த்தன், ராயு, எனப் புலிகளின் முக்கியத் தளபதிகளும் சமாதானச் செயலகத்தைச் சார்ந்த 329 போராளிகளும் வெள்ளைக் கொடியோடு இலங்கை ராணுவத்திடம் சரணடைய சென்றனர்.அவர்கள் குடும்பம் குடும்பமாகக் கொடூரமான முறையில் கொன்றொழிக்கப்பட்டார்கள். இதை நாம் என்ன என்று சொல்ல முடியும்?
நடேசனும், முன்னூறுக்கும் மேற்பட்ட போராளிகளும் ஈவிரக்கமற்ற முறையில் கொல்லப்படுவதற்கு பாதிரியின் இந்தியாவுடன் சேர்ந்து செய்த சுழ்ச்சி தான் காரணம். நமது சரணடைந்த போராளிகளை கைது செய்த இராணுவம் என்ன செய்வதென பாதுகாப்பு அமைச்சிடம் கேட்டதும் அதற்கு கோட்டபாய முடித்துவிடுங்கள் என சொன்னதும் அப்போது நமது கட்டுப்பாட்டு அறையில் இருந்த கருவிமூலம் அறிந்து கொண்டோம்.
ஆனால் உடனடியாக சம்பந்தப்பட்டவர்களிடம் இது பற்றி வினவுவதற்காக தொடர்புகொண்டபோது பாதிரியாரின் தொடர்போ அல்லது மேரி கொள்வினுடைய தொடர்போ கிடைக்கவில்லை.
ஆனால் கனிமொழிஅப்படி எதுவும் நடக்காது என மட்டும் சொன்னார்.
எனவே இந்த இடத்தில் தான் நாம் பாதிரியாரையும் கனிமொழியையும் இந்தியாவின் சிதம்பரத்தின் மூலம் சோனியா செய்த நாடகத்தை அறிந்து கொண்டோம்.
நமது தலைமை பீடம் கடைசி வரை சொன்னது ஆயுதங்களை மௌனிக்க செய்கிறோம் என்பதைத்தான்.
இதை நாம் கே.பி ஊடாக ஆயுதங்களைக் கீழே போடா சம்மதம் என்றும் .
எம்முடன் இருந்த போராளிகள் அனைவரையும் ஆயுதங்களை போட்டுவிட்டு மக்களுடன் செல்ல உத்தரவு இடப்பட்டுவிட்டதாகவும் இப்போது முக்கியமான மூவாயிரத்துக்குட்பட்ட போராளிகளாக எம்முடன் ஆயுதம் தரித்தவர்களாக இருக்கின்றனர் எனவும் சொல்லப்பட்டது.
மேலும் நாம் போரை நிறுத்திக் கொள்ளத் தயாராகவிருக்கின்றோம்.மக்கள் செத்துக் கொண்டிருக்கின்றார்கள்.நாளுக்கு சராசரி மூவாயிரம் பேருக்கு மேல் செத்துக் கொண்டிருக்கின்றார்கள்.இனி யுத்தத்தை நாம் தொடர விரும்பவில்லை என்றும்
சொல்லப்பட்டது. நாம் நமது தலைவரையாவது காப்பாற்ற வேண்டும் அதற்கு ஒரு வழி தேவை என்று அதற்காவது ஒழுங்கு செய்யும்படியும் கேட்டுக்கொண்டோம்.
அதற்கு நெடியவனும் கஸ்ரோவும் கே.பி யும் செய்த வேலைகள் அடுத்து சொல்லுகிறேன்?
இந்த சந்தர்ப்பத்தில் கே.பி தலைவரையும் சரணடையசொல்லி வட்புறித்திய வண்ணமே இருந்தார்.ஆனால் இப்போதுள்ள 3000 குட்பட்டவர்கள் ஆயுதங்களைக் கீழே போடுவோம். கையளிக்கப் போவதில்லைஎன சொல்லப்பட்டது. .
இதன் போது கே.பிக்கு தலைவரால் சொல்லப்பட்ட செய்தி உலகுக்கு சொல்லும்படி ஆயுதங்களை நாங்கள் கீழே போட விரும்புகின்றோம். எமது தேசத்துக்கு ஒரு அரசியல் தீர்வைக் காண விரும்புகின்றோம்.என்று அறிவிக்கும் படி சொல்லப்பட்டது[தொடரும்....]
தலைமையை காப்பாற்றும் முயற்சி .
தலைவரையும் சில முக்கிய தலைவர்களையும் இறுதிக் காலகட்டத்தில் பாதுகாப்பது தொடர்பாக நமது கட்டளைப்பீடம் பல்வேறு வழிகளில் முயற்சிகள் எடுத்து எவையும் சாத்தியமற்றுப் போனமையால் அவரை பாதுகாக்கும் திட்டம் குறித்து சார்ல்ஸ் அன்ரனிவசம் கொடுக்கப்பட்டது.
இவர் கேபியுடன் புதிய திட்டம் ஒன்றை சொல்லி அதற்காக உலங்கு வானூர்தி
ஒன்றினை வாங்கி திறமை மிக்க ஓட்டுனர்கள் உதவியுடன் பாதுகாப்பான இடம் ஒன்றுக்கு தலைவரையும் சிலரையும் கொண்டுசெல்வது என்று புதிய திட்டம் வகுக்கப்பட்டது.
இத்திட்டத்தின் படி வன்னியை விட்டு நகரமாட்டேன் என பிடிவாதமாக அதுவரை நாழும் இருந்த தலைவரை சார்ல்ஸ் மூலமாக தலைவரை சம்மதிக்க வைத்ததுடன் உடனடியாக நடைமுறைப்படுத்த ஆவன செய்யும்படி கேபியிடம் தெரிவிக்கப்பட்டது.
இந்த நகர்வுக்கு ஏறத்தாள 3 மில்லியன் அமெரிக்க டொலருக்கு மேல் பணம் தேவை என்றும் கே.பி சொன்னதற்கு, அதற்கான அனைத்து ஒழுங்குகளையும் நெடியவன் மற்றும் காஸ்ரோ மூலம் கே.பி க்கு கொடுக்க ஒழுங்கு செய்யப்பட்டது.
உடனடியாக பணத்தை கே.பி இடம் கொடுக்குமாறும் தலைமை பீடத்தால் நெடியவனுக்கும் காஸ்றோவுக்கும் உத்தரவிடப்பட்டது.
அன்றைய காலத்தில் நமது புலம்பெயர் நிதிகளுக்கு இந்த இருவரும் தான் பொறுப்பு.
அனான் நடந்தது வேறு! சார்ள்ஸ் அன்ரனி தலைவரை பாதுகாக்கும் பொறுப்பேற்றபின் அவரது குடும்ப அங்கத்தவர்கள் முக்கிய நபர்களை காப்பாற்ற ஒழுங்கு செய்யும்படி கே.பி இடம் சொல்லப்பட்டது . அதற்கு கே.பி வான்வழி மூலம் காப்பாற்றுவதட்கான முதற்கட்ட ஏற்பாடுகளை செய்துவிட்டு அதற்கான பணத்தை தரும்படி சாள்சிடம் மறுபடி தொடர்பு கொண்டார்.
இத்திட்டத்தின்படி கடற்படை கண்ணில்படாத தொலைவிலுள்ள ஆபிரிக்க நாடுகள் அல்லது நமது நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொள்ளும் ஆசிய நாடு ஒன்று இவை ஏதாவது ஒரு நாட்டுக்கு கொண்டுல்வது எனவும் இதற்காக கே.பி இந்த நாடுகளின் சிரேஷ்ட தலைவர்களுடன் தொடர்புகொண்டு அவர்களது சம்மதத்தை பெற்றும் இருந்தார் என்று எங்களுக்கு சொல்லப்பட்டது.
எனவே நாம் இந்த மிகவும் அபாயகரமான முயற்சியை எடுக்க முடிவுசெய்து கொண்டோம். . .
அதன்படி மிக வறிய ஆபிரிக்க நாடு ஒன்றின் துறைமுகத்திலிருந்து கப்பல் ஒன்றை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. , உக்ரேய்ன் நாட்டிலிருந்து ஒரு உலங்கு வானூர்தியையும் வாங்கஒழுங்கு செய்யப்பட்டு அதன் மாதிரியும் அனுப்பப்பட்டிருந்தது.
இதை ஓட்டுவதற்காக நமது வான்படையைச்சேர்ந்த மிக பயிற்சி பெற்ற இரு
விமானிகள் வன்னிக்கு உலங்கு வானூர்தியை கொண்டுசெல்வதற்கும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. ஆனால் சார்ல்ஸ்அன்ரனி தவிர மற்றைய தலைவரின் குடும்பம் அவர்களுடன் பொட்டுஅம்மான், வேறு முக்கிய சில பொறுப்பாளர்கள் உட்பட முதலில் 15 பேரை கொண்டு செல்வது எனவும் முடிவு செய்யப்பட்டது.
ஆனாலும் தலைவர் நாட்டை விட்டு வெளியேற மறுத்தமையால் அவரை இலங்கையின் அடர்ந்த காடு ஒன்றில் அவரையும் சில பொறுப்பாளர்களையும் இறக்கிவிட்டு அண்ணி மற்றும் துவாரகா, பாலச்சந்திரன் பொட்டரின் மனைவி பிள்ளை ஆகியோரை உலங்கு வானூர்தி மூலம் அந்த ஒதுக்கப்பட்ட கப்பலுக்கு கொண்டு செல்லப்படுவர் எனவும் தலைமை ஒழுங்கு செய்திருந்தது.
இதற்காக அந்தகப்பலில் கே.பி இருப்பார் எனவும் சொல்லப்பட்டது.
மிக ஆபத்தான வாழ்வா சாவா என்ற இந்த நடவடிக்கைகளை செய்ய நமது வான்படை தயாராக இருந்தது. அத்துடன் இந்த நடவடிக்கை வெற்றி பெற்றால் மேலும் சிலர் கொண்டுசெள்ளப்படுவர் எனவும் முடிவெடுக்கப்பட்டது
இந்த திட்டத்தை செயற்படுத்த தேவையான மூன்று மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை நோர்வேயில் இருந்த நெடியவன் மற்றும் காஸ்ட்ரோ,கே.பி இடம் சிறிது நேரத்தில் கொடுப்பதாக எமக்கு ,அதாவது சார்ல்ஷுக்கு காஸ்ரோ சொல்லியிருந்தார்.
இங்குதான் காஸ்ரோவினதும் நெடியவனதும் சூழ்ச்சி நடந்தது. .
ஆம் அந்த பணத்தை அவர்கள் கே.பி இடம் இந்தா அனுப்புகிறோம் அந்தா அனுப்புகிறோம் அனுப்பிவிட்டோம் இன்னும் சிறிது நேரத்தில் உலங்கு வானூர்தி வரும் என்றெல்லாம் அந்த நெடியவும் காஸ்ரோவும் சொல்லிக்கொண்டே இருந்தனர்.
ஆனால் செய்யவே இல்லை
நேரம்நகர்ந்து கொண்டே இருந்தது. படைகளும் நெருங்கிக்கொண்டே இருக்கிறார்கள், என்ன செய்வதென்று தெரியாது எமக்குள்ளே ஒரு தடுமாற்றத்துடன் போராட்டம். பணம் வரவில்லை என கே.பி எம்மை குடைந்து கொண்டே இருக்கிறார்.
நாம் நெடியவனையும் காஸ்ரோவையும் தொடர்புகொண்டால் அவர்கள் அனுப்பி விட்டதாக சொல்லுகிறார்கள். நமக்கு என்ன நடந்து கொண்டு இருக்கின்றது என்று எதுவும் புரியவில்லை.தொடர்புகளும் துண்டித்துக்கொண்டு வருகின்றது.நாம் நெடியவனை நெருக்கிக்கொண்டிருக்க கடைசி நேரத்தில் இந்த நெடியவனும் காஸ்ரோவும் தொடர்பையும் துண்டித்து விட்டார்கள். என்ன செய்ய முடியும் ?
கே.பி இடம் தொடர்புகொண்டால் அவர் நெடியவனும் காஸ்ரோவும் பணம் வந்து கொண்டிருக்கிறது, பணம் வந்துக்கொண்டிருக்கிறது’ என கூறுகிறார்கள் என சொல்லுகின்றனர் ஆனால் வரவில்லை என்றும். ஆனால் இப்போது அவர்கள் தன்னுடன் தொடர்பு கொள்வதை நிறுத்திவிட்டார் என்றும் சொன்னார்.
திட்டமிட்டுதான் இந்த நடைமுறையை இந்த நெடியவன் கூட்டம் செய்தது. ஏனெனில் நமது தலைமை நெடியவனின் செயற்பாடுகள் சிலவற்றை முன்னர் எச்சரிக்கை செய்து இருந்ததுடன் அவன் மீது அதிகளவு நம்பிக்கை வைக்காது கடைசி நேரத்தில் நாம் கே.பி யின் மீதும் அவர் அனுபவத்தின் மீதும் நம்பிக்கை வைத்து அவரிடம் இந்த பாதுகாக்கும் பொறுப்பை கொடுத்ததும் இவர்களுக்கு பிடிக்காதிருந்திருக்கலாம்.
அல்லது வேற்று நாட்டு சதிகார கூட்டங்களுடன் சேர்ந்து நம்மை அழிக்க முடிவு கட்டி இதை செய்திருக்கலாம். ..
இது இப்படி இருக்க இராணுவம் மூன்று வழித்தாக்குதல் ஒன்றை மேற்கொண்டது. இதனால் நம்மிடமிருந்து வலைஞர்மடம் – முள்ளிவாய்க்கால்- வட்டுவாகல் ஆகியவற்றை முற்றுகை செய்துவிட்டனர். இதன் பின் நாம் எடுத்த அந்த நடவடிக்கையும் கைநழுவிப்போனது.நெடியவன் , காஸ்ட்ரோ ஆகியோர் திட்டமிட்டு செய்த இந்த செயலாம் நாம் நிர்க்கதி நிலையை அடைந்துவிட்டோம்.
என்னைப்பொருத்தவரையில் நான் நினைக்கின்றேன் இது தனிப்பட்ட விரோதம் தான் காரணம் என்று. இதனால் நாம் கட்டி வழர்த்த அத்தனையும் பறிபோய்விட்டது[தொடரும்...]
இதன் பின் நாம் எமது வலிமைகள் அனைத்தையும் ஒன்று திரட்டி இராணுவ முற்றுகையை ஊடறுத்து தாக்குதல் ஒன்றை செய்தோம் அதன்படி பொட்டம்மான் தலைமையில் ஒரு குழுவாக சேர்ந்து இரகசியமாக நந்திக்கடல் கரையூடாக வெளியேற தாக்குதல் செய்வதெனவும் மற்றைய ஒரு தலைவரான கடாபி தலைமையில் ஒரு குழுவும் சூசை தலைமையில் ஒரு குழுவும்
வேறு இரண்டு குழுக்கள் வேறு திசையால் ஊடறுப்பு தாக்குதல் செய்வதெனவும் முடிவு செய்து நடவடிக்கைக்கு தயாரானோம்.
இத்திட்டத்தின் படி படையினரை ஊடறுத்து காட்டுக்குள் போவதுதான் நமது இலக்காக இருந்தது.
எம்மை முற்றுகையிட்டிருந்த பகுதி மூன்று அடுக்குகளாக இராணுவம் நிற்பதை நமது புலனாய்வு தகவல்கள் கூறின
அப்போது வெளி உலகுடன் தொடர்பை சூசை மட்டுமே செய்வார் எனவும் முடிவெடுக்கப்பட்டது. .
பொட்டம்மான் தலைமையில் தலைவர் பிரபாகரனும் அந்த மூன்று அடுக்கு காவலையும் தாண்ட கடுமையான தாக்குதல் செய்தார்கள். சுமார் எழுபத்தைந்துக்கும் மேற்பட்ட கரும்புலிகள் இதில் தாக்குதலை மேற்கொண்டார்கள் .இப்பொழுது மக்கள் அதிகளவு இராணுவக்கட்டுப்பாட்டுக்கு சென்றுவிட்டாலும் ஒருபகுதியினர் நம்முடனேயே இருக்கின்றார்கள்.
ஆனால் நாம் நினைத்த மாதிரி அந்த முற்றுகையை நம்மால தாண்டிச்செல்ல முடியவில்லை. அந்த தாக்குதலில் மட்டும் நமது மூத்த தலைவர்கள் உட்பட அறுநூறு பேர் சாவைத்தளுவிக்கொண்டனர். இத்தாக்குதலில் சிங்களராணுவமும் சமமான அளவினர் சிதறி மரணமடைந்தனர் என்பது நாம் அப்போது பரிவர்த்தனை மூலம் பெறப்பட்ட தகவல் இது. இத்தாக்குதல் மூலம் நாம் பெரிதும் எதிர்பார்த்த கடைசி இலக்கும் எட்டாமல் போனதால் அண்ணனும் சில போராளிகளும் மட்டும் திரும்பி வந்தார். . ஆனால் போட்டு அம்மான் திரும்பி வரவில்லை. அவருடன் மேலும் பல முக்கிய உறுப்பினர்களும் திரும்பிவரவில்லை.
சாள்சின் மரணத்தின் பின் அண்ணனது ஒவ்வொரு நகர்வையும் கண்ணியமாக பார்த்துவந்த பொட்டுஅம்மான் தன்னால் இந்த ஊடறுப்பு தாக்குதலை செய்து அண்ணனை காட்டுப்பகுதிக்கு நகர வைக்க முடியாமல் போனால் தான் திரும்பி கடைசிவரை வரமாட்டேன் என்றும் இதுதான் நமது தலைவிதியை நிர்ணயிக்கும் கடைசி முயற்சி என்றும் தாக்குதலை செய்யும் சில நிமிடங்களுக்கு முன் போராளிகளுடன் உரையாடும்போது சொல்லியிருந்தார்.
ஏற்கனவே போட்டு அம்மான் விழுப்புண் அடைந்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது. பொட்டு அம்மானின் இந்த உறுதி மிக்க வார்த்தைகளால் நமது போராளிகழும் மிகுந்த நம்பிக்கையுடன் இத்தாக்குதலுக்கு முகம் கொடுத்தனர்.
ஆனால் நாம் நினைத்த மாதிரி இத்தாக்குதல் அமையவில்லை. இந்த ஊடறுப்பு தாக்குதல் தொல்வியாடைந்த பின் பொட்டு அம்மான் திரும்பி வராமை நமக்கு மேலும் பெரும் இடியாக விழுந்தது. இதன் பின் அண்ணன் மிகவும் மனமுடைந்தவராகவும் வேறு எந்த வொரு தளபதிகளுடன் கதைப்பதைக்கூட தவிர்த்தும் வந்தார். .
இதனால் அண்ணனை பாதுகாக்க நாம் எடுத்த கடைசி நடவடிக்கையும் தோல்வியில் முடிந்தது.. நம் தலைமை பதறிப்போனது நாம் அனைவரும் இப்பொழுது பூரண முற்றுகைக்குள் வந்துவிட்டோம் என்பதால் எதுவும் செய்ய முடியாது இருந்ததனால் மேலும் அப்பொழுது ஆயுதங்களுடன் இருந்த ஆயிரம் போராளிகளை நிராயுத பாணிகளாக செல்லும்படியும் அவர்களை மக்களுடன் சேர்ந்து செல்லும்படியும்
தலைவரால் பணிக்கப்பட்டது.
மேலும் நமது தலைவர்கள் ஒருபோதும் சரணடைவதை விரும்பவில்லை. இத்தனை போராளிகள் மக்கள் சொத்துக்களை இழந்த பின் நாம் சரணடைவதால் எதுவும் நடக்கப்போவதில்லை. மக்களுக்கும் என்னால் எந்தவிதமான பதிலும் சொல்லமுடியாது. நாம் நேசித்த அத்தனையும் போய்விட்டது.நீங்கள் செல்லுங்கள் உங்களுக்காக நம் புலம்பெயர்ந்த சமூகம் உள்ளது .அவர்கள் அடுத்த நகர்வுகளை செய்வார்கள். நீங்கள் அவர்களது செயல்களுக்கு உருவம் கொடுக்கும் போராளிகளாக இருங்கள் என சொல்லி அனுப்பினார்.
அதனால் தானும் சில முக்கிய போராளிகளும் கடைசியரை போராடவுள்ளதாகவும், நம்மை இனி நாமே பார்த்துக்கொள்ளுகின்றோம் நீங்கள் நல்ல நம்பிக்கையுடன் செல்லுங்கள். நான் கடைசி வரை சரணடைய மாட்டேன். அப்படி ஒரு நிலை வந்தால் நான் இருக்கமாட்டேன். என சொல்லி வற்புறுத்தி நம்மை மக்களுடன் செல்ல வைத்தார்.
சண்டை கடைசிக்கட்டத்தை எட்டிவிட்டது வெளியுலகுக்கு எந்த தகவலையும் அதன் பின் நமது கட்டுப்பாட்டிலிருந்து கொடுக்க முடியவில்லை.
.
[தலைவரின் இந்த கடைசி நேர கட்டளைப்படி மக்களுடன் சேர்ந்து வந்தவர்களில் நானும் ஒருவன்.][தொடரும்....]
நமது தலைமை இந்த நெடியவனுடனும் காஸ்ரோவுடனும் உருத்திரகுமாருடனும் கே.பி யுடனும் தொடர்பிலிருந்த பொழுது சொல்லியது, உங்களை நம்பி ஆயுதங்களை கீழே போட்டு சரணடைந்த இந்த போராளிகளின் மறுவாழ்வை கவனியுங்கள் அவர்கள் குடும்பத்தை வாழவைக்க , அவர்கள் விடுதலைக்கு உதவுங்கள் என்பதும், எமது அடுத்த கட்ட போராட்ட களம் புலம்பெயர் தலைவர்களிடமும் அத்தேச மக்களிடமும் தான் உள்ளது . அதனால் நீங்கள் அதற்கான வழியை எடுங்கள். என்பதுமே
தலைவரின் கட்டளை ஒருபுறம் தலைவருக்கு இந்த புலம்பெயர் தேச தலைவர்கள் கொடுத்த உறுதிமிக்க வார்த்தைகள் ஒருபுறம் என எல்லாவற்றையும் நம்பி தலைவர் எம நம் போராளிகள் சரணடைவைத்தார்.
நமது தமிழர் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் செய்தி இப்படி இருந்தது..
அதாவது யுத்தம் நடக்கிறது நமது மக்களை காக்க ஏதாவது எடுங்கள் என எமது தலைமையால் கோரப்பட்டது. இதற்கு இப்போது தமிழர் தலைவர்கள் நாங்களே நாம்தான் ஏகபிரதிநிதிகள் என கூறும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் சொன்னது மிகவும் வேதனை மிக்கது..
ஆம் நம் தலைவர்களை காப்பாற்ற சிங்கள தலைவர்களுடன் பேசும்படி நடேசனாலும் சூசையாலும் கோரப்பட்டதற்கு இன்னும் சில நாளில் முடியப்போகும் விடையத்தை பற்றி பேசுவதனால் தங்களது அடுத்த கட்ட அரசியல் நகர்வுகளுக்கு சிங்கள தேசத்தில் எதிர்ப்பு கூடிவிடுவதுடன் தாம் வாழ முடியாது என்றும் தமக்கு இப்பொழுது இந்த வழி மோசமானதாக இருக்கிறதென்றும் சொல்லியதுடன் இனி தன்னுடன் தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும் அவர் சொல்லி தொடர்பை துண்டித்து விட்டார்.
எப்படி இருக்கு இந்த நம் ஏக பிரதிநிதியின் கூற்று?? நமது செல்வாக்கினால் பதவி ஏறிய இந்த ??// சொன்ன சொல் எப்படி இருக்குது? அவரைப்போல்தான் மாவையும் எதுவும் செய்யாது ஒதுங்கிவிட்டார்.
இப்போது தேர்தல் காலங்களில் மறுபடியும் நமது கதையை சொல்லி வாழ்க்கை ஒட்டுகின்றார்கள். மக்களே நீங்கள் இந்த போலிகளை நம்பாதிர்கள் இவர்கள் சுயநலவாதிகள் உங்களுக்கு எதையும் இவர்கள் செய்யவும் போவதில்லை.
இவர்கள் போன்றவர்கள்தான் நம் தலைவரை இராணுவத்திடம் சரணடைந்துவிட்டார் என செய்தி பரப்பியவர்கள்.அதுமட்டுமல்ல கைது செய்யப்பட்டு தலைவர் நிர்வாணமாக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டார் எனவும் சொன்னார்கள் என் குடும்பத்தார் இப்பொழுது என்னிடம் கேட்கின்றார்கள் என்ன சொல்வது நான்??
நம் தலைவர் முன் மண்டியிட்ட கூட்டம் இப்ப இப்படி செய்கிறதே ……
இந்த அரசியல்வாதிகளால் வேண்டுமென்றே இந்த கதை கட்டப்பட்டு இருக்காது இது சிங்களத்துடன் சேர்ந்து தமது வாழ்வை தக்கவைக்க இவர்கள் செய்யும் செயல்தான் என நான் நினைக்கிறேன் .ஆனால் சிங்களவன் அவரை போற்றி வருகின்றான் பாருங்கள் நம்மை கழுத்தறுக்க காத்திருந்த கூட்டத்தினர் செயலை .
ஆனால் நான் சொல்லுகிறேன் நம் தலைமை எப்பொழுதும் மண்டியிடவில்லை. பாதுகாப்பாக செல்லவே முயன்றது.அதற்காக கடைசிவரை போராடினோம். நான் மக்களுடன் கடைசியாக இராணுவக்கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டேன். ஆனாலும் நான் சொல்லுகிறேன் நம் தலைமை சிங்களவனிடம் மண்டியிடவில்லை.
ஆனால் நம் தலைவரின் நிண்டகால மெய்ப்பாதுகாப்பாளர் கடாபி வேறு திசையில் படை நகர்த்த சென்றது உண்மைதான். அவருக்கு என்ன நடந்தது என்பது எனக்கு தெரியாது. ஆனால் அவரும் பல போராளிகளும் ஆனந்தபுரம் பகுதியில் எதிர்பாராத விதத்தில்
மயக்க குண்டு வீசிய நிலையில் கைது செய்யப்பட்டார் என எமக்கு அப்போது செய்தி வந்தது. இது உறுதி படுத்தப்படவில்லை நம் தலைமையால்.
பதினையாயிரம் போராளிகளின் சரணடைவும் அவர்களை காட்டிக்கொடுப்பும்..
நம் தலைவரின் சொல்கேட்டு சரணடைந்த இந்த போராளிகள் அனைவரும் வவுனியா கொண்டு செல்லப்பட்டு அங்கு தனித்தனியாக விசாரணை செய்யப்பட்டு இந்நாள் வரை விடுதலை செய்யப்படவில்லை
மக்கொளோடு சென்றவர்கள் பலர் கடைசியரை மக்களாகவே இருந்து வெளிவந்துவிட்டனர். பலர் மக்களால் காட்டிக்கொடுக்கப்பட்டதும் உண்மைதான். இது நடப்பதற்கு காரணம் ஒரு புலியை காட்டித்தந்தால் அவர் விடுதலை செய்யப்படுவார் என்ற படையினரின் சூசகமான செயல்.
புலிகள் என தம்மை காட்டிக்கொண்ட பலர் தனியாக கொண்டு செல்லப்பட்டதும் ஒரு சிலர்இலங்கை புலனாய்வுத்துறைக்கு . பல லட்சம் கொடுத்து இரகசியமான முறையில் வெளிவந்துவிட்டனர் என்பது தான் உண்மை.[போராளி என் பயணம் முடியவில்லை ஏதோ ஒரு திசையை நோக்கி போய்க்கொண்டு இருக்கின்றேன் தமிழ் தமிழர்களால் அழிவதை உணர்ந்தவனாய் நன்றி வணக்கம்]

Geen opmerkingen:

Een reactie posten