dinsdag 26 april 2011

ஐ.நா. நிபுணர் குழுவின் 214 பக்கங்கள் அடங்கிய அறிக்கை உத்தியோகபூர்வமாக வெளிவந்துள்ளது

[ திங்கட்கிழமை, 25 ஏப்ரல் 2011, 09:06.15 PM GMT ]
இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் யுத்தக் குற்றங்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் சபை நிபுணர் குழுவின் அறிக்கை இன்று உத்தியோகபூர்வமாக வெளிவந்துள்ளது.
இலங்கையில் இறுதிப் போர் நடைபெற்ற காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்கள் தொடர்பான விசாரணை ஒன்று நடைபெற வேண்டுமா இல்லையா என்பதை பரிந்துரைக்க அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை தற்போது முழுமையாகக் வெளிவந்துள்ளது.
214  பக்கங்களை உள்ளடக்கிய அந்த அறிக்கையின் எந்தப் பாகமும் தணிக்கைக்கு உட்படாமல் வெளிவந்துள்ள இவ்வறிக்கையே யுத்தக் குற்ற விசாரணை ஒரு உள்ளக விசாரணையாக நடைபெறுமா அல்லது வேறு அலகுகளுடன் இணைந்த ஒரு விசாரணையாக இடம்பெறுமா என்பதை முடிவு செய்ய சிறீலங்காவிற்கும் சர்வதேசத்திற்கும் உதவும்.
இந்த அறிக்கை இலங்கை அரசினதும், தமிழீழ விடுதலைப் புலிகளினதும் யுத்தக் குற்றங்கள் என அறியப்பட்டவற்றை அப்படமாகப் பட்டியலிடுகிறது.
ஐ.நா. அறிக்கையின் முழு வடிவத்தினை நேரடியாக பார்வையிட
Download
Download
3ம் இணைப்பு
ஐக்கிய நாடுகள் அமைப்பு நிபுணர் குழு அறிக்கையை முழுமையாக வெளியிட்டுள்ளது
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டபோரில் அரசாங்கப் படையினரும், தமிழீழ விடுதலைப் புலிகளும் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக நிபுணர்குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் நம்பகமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
வெளிப்படைத்தன்மை மற்றும் மக்களின் நலனைக் கருத்திக் கொண்டு விசாரணை அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டதாக ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நிபுணர் குழு அறிக்கை முழுமையாக விசாரணைகளை நடத்தியிருப்பதாகவும் இதன் மூலம் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கப் படையினரும் தமிழீழ விடுதலைப் புலிகளும் சர்வதேச மனித உரிமை சட்டங்களை மீறிச் செயற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் நிபுணர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன்,
மனித உரிமை மற்றும் போர்க் குற்றச் செயல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் நிபுணர் குழு அறிவித்துள்ளது.
எறிகணைத் தாக்குதல் நடத்தி பொதுமக்களை படுகொலை செய்தமை, வைத்தியசாலைகள் மற்றும் மனிதாபிமான முக்கியத்துவம் வாய்ந்த கட்டடங்கள் மீது எறிகணைத் தாக்குதல் நடத்தியமை, மனிதாபிமான உதவிகளை மறுத்தமை, இடம்பெயர் மக்கள் மற்றும் புலிச் சந்தேக நபர்கள் உள்ளிட்டவர்களின் அடிப்படை உரிமைகளை மீறியமை, போர் வலயத்திற்கு வெளியே ஊடக அடக்குமுறை உள்ளிட்ட மனித உரிமை மீறல் ஆகிய குற்றச்சாட்டுக்கள் அரசாங்கத்திற்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் பொதுமக்களை மனித கேடயமாக பயன்படுத்தியமை, புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து தப்பிச் செல்லும் பொதுமக்களை கொலை செய்தமை, பொதுமக்கள் நிலைகளுக்கு அருகாமையில் ஆயுதங்களைப் பயன்படுத்தியமை, பலவந்தமாக சிறுவர்கள் உள்ளிட்டவர்களை படையில் இணைத்துக் கொண்டமை, பலவந்தமாக ஊழியர்களை கடமையில் ஈடுபடுத்தியமை, தற்கொலைத் தாக்குதல்கள் மூலம் பொதுமக்களை படுகொலை செய்தமை போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குற்றச் செயல்களுக்கு எதிராக சர்வதேச ரீதியல் ஏற்றுக்கொள்ளப்பட்ட விசாரணைகள் நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென நிபுணர் குழு வலியுறுத்தியுள்ளது.
இறுதிக் கட்ட போரின் போது பொதுமக்கள் இழப்பு ஏற்படவில்லை என அரசாங்கம் வலியுறுத்தி வருகின்ற போதிலும் உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
சர்வதேச விசாரணைகள் கொள்கை அடிப்படையில் மேற்கொள்ள முடியாது எனவும், கட்டயாமாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இறுதிக்கட்ட போரின் போது சர்வதேசம் சிவிலியன் இழப்புக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குற்றச் செயல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணைகளை நடாத்த இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஐ.நா. அறிக்கையின் முழு வடிவத்தினை நேரடியாக பார்வையிட

Geen opmerkingen:

Een reactie posten